தரையில் விழுந்து புரண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும் என்பதுபோல, அரசகுடும்பத்தில் பிறப்பதால் மட்டும் தலையில் சரக்கிருக்கத் தேவையில்லை என்று நினைக்கவைக்கிறது இந்தச் செய்தி. பாவம் சின்னப்பையன் ஏதோ தெரியாமல் பண்ணிவிட்டான் என்று நினைக்கவும் தோன்றுகிறது, இல்லை உலகத்துக்கு நாஸிகள் செய்த கொடூர சமூகசேவை என்ன என்றுகூட சொல்லிக்கொடுக்காமலா வளர்த்தார்கள் என்றும் நினைக்கத் தோன்றுகிறது. சைமன் வைஸந்தால் மையம், ஆஷ்விட்ஸுக்குப் போய் வருத்தந்தெரிவிக்கச் சொல்லியிருக்கிறது.
Thursday, January 13, 2005
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
இங்கிலாந்து அரசகுடும்பத்தில் பிறந்தால் பொதுவாக தலையில் சரக்கே இருப்பதில்லை - என்பதுதானே நிசம்?
அது கிடக்க...
Fancy dress competition நேரத்தில் எவ்வளவோ கெட்டவர்கள் போலெல்லாம் வேஷம் போடும்போது ஏன் நாஸியாக வேஷம் போடக்கூடாது என்பதை யூதர் அமைப்புகள் இதுவரை சரியாகச் சொல்லவில்லை.
ஹிட்லர் என்பது பார்த்தவுடன் புரிந்துகொள்ளக்கூடிய ஒருய் வேஷம். ஒரு போட்டிக்காகவோ, அல்லது விளையாட்டுக்காகவோ ஏதோ ஒரு வேஷத்தைப் போடுவதால் அந்த வேஷம் போட்டவர்களின் கருத்துகளை முன்னின்று நாம் பரப்ப ஆசைப்படுகிறோம் என்று சொல்ல முடியுமா?
சைத்தான் போலவும்தான் பலர் வேஷம் போடுகிறார்கள்...
பத்ரி: இந்த இணைப்பைப் பார்க்கவும்...
http://www.rediff.com/news/2003/oct/21franc.htm
ஜான் ஸ்டூவர்ட்டை லாரி கிங் பேட்டி கண்டதைப் பார்த்தேன். நகைச்சுவையாக ஸ்டூவர்ட் சொன்ன பதில் ஓரளவு தைக்கவே செய்தது: "நாங்கள் யூதர்களாக இருப்பதால் பெட்டி படுக்கையை எப்போதும் கட்டித் தயாராகவே வைத்திருப்போம்" என்றார். அந்தமட்டில், யூதர்கள் அனுபவித்த அடக்குமுறைகள் ஆவணப்படுத்தப்பட்ட அளவு பிற மதத்தினர்/கலாச்சாரத்தினர் அனுபவித்த அடக்குமுறைகள் ஆவணப்படுத்தப்படவில்லை என்பது நிஜமே. அதற்காக, மேற்கண்ட இணைப்பைக்கொண்டு என்னை யாரும் வீரத்துறவிக் கோஷ்டிகளில் ஒருவன் என்று கருதிவிடவேண்டாம்!! நீங்கள் சொன்னது சரிதான். எங்கள் ஆய்வகத்தில் ஜெல்லை அறுக்க ரேஸர் பிளேடுகள் இருக்கும். ஒருநாள் தற்செயலாக அதன் brand பெயரைப் பார்த்தால்: Red Devil! என்னதான் இருந்தாலும் நம்மூரில் 'சிவப்புப் பேய்' என்று யாராவது தீப்பெட்டி போடுவார்களா? நிஜத்தில் அது ஒரு குழப்பமே. சைத்தான், லூஸிஃபர் போன்றவையெல்லாம் brand name ஆக இருக்கும் கலாச்சாரத்தில் இதுபோன்ற எதிர்ப்புக்களைப் பார்க்கும்போது வினோதமாகத்தான் இருக்கிறது. Royal trouble, royal sized coverage; அவ்வளவுதானென்று நினைக்கிறேன்!
பி.கு: இதை வாரமலருக்குத் துணுக்குச் செய்தியாக அனுப்பலாம் என்று இருக்கிறேன். தமிழின் அதிகாரப்பூர்வமான பிரிட்டிஷ் ராயல் ஒலிபெருக்கி ஆயிற்றே அது! ஹிஹி! :-)
நம்ம ஊரு சாமிகள் எல்லாம் (மேல்த்தட்டு/பணக்கார சாமிகள்/ஆரிய வழிபாடு ...???) ஸ்வஸ்திகா சின்னத்தோடதான் இருக்காங்க. .. அவாளுக்கெல்லாம் சொந்த நாடு செர்மனியாமே...மெய்யாலுமா?
குமரன்
Post a Comment