//நான் சினிமாவுக்கு விரோதி அல்ல என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்
கலை, பண்பாட்டு இயக்கம் சார்பில் திரைப்பட கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ராமதாஸ் பேசியது:
அனைத்து வீடுகளிலும் டிவிடி வந்துவிட்டது. குறைந்த செலவில் விசிடியிலேயே திரைப்படங்களை பலர் பார்க்கலாம். எனவே நீங்கள் (திரையுலகினர்) ஏன் தியேட்டருக்கு போகச் சொல்கிறீர்கள்.
தியேட்டர்கள், திருமண மண்டபங்களாக மாறுவதாக ஒருவர் கூறினார். என்னைப் பொறுத்தவரை சினிமா தியேட்டர்கள் அனைத்தும் திருமண மண்டபங்களாக மாறவேண்டும் என்றுதான் சொல்வேன். திரைத்துறையைச் சேர்ந்தவர்களே சிடியை தயாரித்து மக்களுக்கு விற்கலாம்.//
(சிஃபி தமிழ் செய்திகளிலிருந்து...)
ராமதாஸ்!! கல்லூரிக்குப் போய் டாக்டருக்குப் படி என்றால், ஜாதிக்கட்சி நடத்துவது எப்படி என்று கற்றுக்கொண்டு வந்துவிட்டு, இப்போது சமூகநலப் போதனை வேறு!! அனைத்து வீடுகளிலும் டிவிடி இருக்கிறதென்றால், பிறகு இவர்களெல்லாம் எதற்கு ஊர் ஊராக அலைந்து கூட்டம் நடத்தவேண்டும், ஒரு டிவிடி படம் எடுத்து விநியோகித்துவிடலாம். ஆஸ்பத்திரிக்குப் போகாமல், நோயாளி வீட்டுக்கே ஒரு சுயவிளக்க அறுவைசிகிச்சை டிவிடி அனுப்பி, கூடவே கத்தி கபடாக்களையும் அனுப்பிவிடலாம், நீயே அறுத்துத் தைச்சுக்க கண்ணு என்று. ஓட்டுக்கேட்கப் போகும்போது எதற்கு தெருத்தெருவாக அலையவேண்டும்? ஆயிரம் டிவி பொட்டிகளையும் பிரச்சார டிவிடிக்களையும் தமிழ்நாடு முழுக்க அனுப்பிவிட்டால் போகிறது.
என்னதான் இருந்தாலும், அவரது அறிவுரையை ஒருமுறை பாருங்களேன்!! சினிமா எடுப்பதைவிட்டு டிவிடி எடுத்து விநியோகிக்கவேண்டுமாம். ஹிஹி, எல்லாம் நம்ம நேரம். காலச்சுவடைத் திறக்கலாம்னு சிஃபி தளத்துக்குப் போனால் இது கண்ணில் பட்டுத்தொலைகிறது. இன்னிக்குப் பொழுதை தண்டத்துக்கு ஒழித்தாயிற்று (அதான் தெரியுதே), போனாப் போகிறது போ.
Thursday, January 13, 2005
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
http://www.dinamani.com/Cinema/cineItems.asp?ID=DNC20050112131440&Title=Cinema&lTitle=%A3%B2U%F4&Topic=0
it is kinda different there...dunno know which one right exactly
Sorry, Just read sify news. It both are kinda similar.
ராமதாஸ் பேசியதெல்லாம் (பொருட்படுத்தக்கூடாதது)வச்சு பதிவிலே ஓபி அடிப்பது சரியில்லை :)
//ராமதாஸ் பேசியதெல்லாம் (பொருட்படுத்தக்கூடாதது)வச்சு பதிவிலே ஓபி அடிப்பது சரியில்லை :)//
அந்த ஓபியை அத்தனை பேர் கேக்கும்போது நம்ம மினி ஓபியையெல்லாம் யாரும் கண்டுக்கமாட்டாங்கங்கற ஒரு நம்பிக்கைதான்! ;-)
Post a Comment