Wednesday, October 13, 2004

PBS இணைப்பு

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஆர்வமுள்ளவர்கள் PBS ன் இந்த செய்திக்கதையைப் பார்க்கவும். புஷ் கெர்ரி இருவரைப்பற்றியும் சுருக்கமான, தெளிவான அறிமுகங்கள். PBS நடுநிலைமையை நம்பலாம் என்பது என் அபிப்ராயம்.

9 comments:

Anonymous said...

PBS => Liberal!

-dyno

சன்னாசி said...

ஒருவகையில் Fox, Rush Limbaugh போன்றவர்கள் மற்றும் சிலர் தவிர மற்ற அனைத்து மீடியாக்களும் பெருமளவு liberal என்பதும் உண்மையே...

-/பெயரிலி. said...

PBS => Liberal! (according to American Neutrality Indicator) ;-)

சன்னாசி said...

Hands up என்றீர்கள் திரு.பெயரிலி, கையைத் தூக்கிவிட்டேன்!!

-/பெயரிலி. said...

அதில்லை; அமெரிக்காவிலே, அதிகமான பேச்சுவானொலிகள் வலதுசாரித்தனமும் கட்டுப்பெட்டித்தனமும் கொண்டவைதானே. பெருந்தொலைக்காட்சிகள் (கம்பித்தொலைக்காட்சிகள் உட்பட) பார்த்தால், அநேகமாக எல்லாமே காற்றோடும் திசையிலே ஆடுகின்றவைதான். விற்பனைக்கு அப்பாலே அவற்றின் நிலைப்பாடுகளிலே பெருமளவு வித்தியாசமில்லை. ஒன்றோடு ஒத்துப்பார்த்துமட்டுமே மற்றதினை சுயாதீனமானது, கட்டுப்பெட்டித்தனமானதென்று வரையறை சொல்லலாம். ஆக, சம்பந்தப்பட்ட சில தொலைக்காட்சி ஆளுமைகளுக்கப்பால், fox, Rush L. போன்றோர் தவிர்ந்த மீதியான பேரூடங்களும் சுயமில்லாத சுயாதீனங்களே ;-)

Anonymous said...

ரமணி:

ஜோன்ஸ் கூட்டு நிறுவனத்தின் வழியே வந்திருக்கும் இடதுசாரி வானொலி பேச்சு நிகழ்ச்சியாளர் எட் ஷல்ட்ஸ் என்கிற ஆள்,ஏர் அமேரிக்காவின் அல் ஃப்ரங்கனுக்கு பரவாயில்லை..சில விடயங்களில் ஒத்துப் போக முடிகிறது,எப்பவாவது ஷான் ஹேனிடியோட ஒத்துப் போக முடிகிற மாதிரி..

சிந்திக்க வைக்கிற ஆள் என்று பார்த்தால் http://www.michaelmedved.com/ மைக்கல் மெட்வெட் ஐ சொல்லலாம்.பொய் வேடம் கிடையாது அந்த ஆளிடம்..

Anonymous said...

முந்தைய பின்னூட்டத்தை செய்தவர் வாசன் பிள்ளை.&

I Vassan Pillai approves this feedback

Anonymous said...

புஷ் ஐ கேலி பண்ண நினைத்து, புஷ் கோளாறாய் ஆங்கிலத்தை பேசுவதைப் போல, நான் எழுதிவிட்டேன்!

Vassan Pillai approves this feedback என்றிருந்திருக்க வேண்டும்

-/பெயரிலி. said...

வாசன்,
அல் ப்ராகைன் நகைச்சுவைக்குப் பரவாயில்லை; ஆனால், ஒரு நிகழ்ச்சிநடத்துனராக அறுவையோ அறுவை. ஒன்றுமே உருப்படியில்லை. அந்த விதத்திலே yourcall .org Laura , pacifica.org amy goodman ஆகியோர் மிகவும் இடதுசாரிகள் (அனைத்தினையும் ஒத்துக்கொள்ளவும் சில சமயங்களிலே முடிவதில்லை). இடதுசாரிகள் சுயாதீனர்கள் என்று கொண்டால், இவர்களையும் கொள்ளலாம். பழமைவாதிகளிலே சில விடயங்களிலே Bob Novak, Pat Buccanan ஆகியோர் புது-பழமைவாதிகளோடு முரண்படுகின்றதாக இருக்கின்ற நிலைகளிலே ஒத்துக்கொள்ளக்கூடியதாகவும் உள்ளது (ஈராக் யுத்தம் ஓர் உதாரணம்)>