Thursday, October 14, 2004

பெரிதாக ஒன்றுமில்லை....



நேற்று வேலை முடிந்து ஏதோ யோசனையுடன் வெளியே வந்துகொண்டிருந்தேன். தற்செயலாக அண்ணாந்து பார்த்தபோதுதான் உறைத்தது கடைசியாக வானத்தைப் பார்த்தது எப்போதென்றே நினைவில்லையென்று. சட்டென்று ஒரு துக்கம். நான் வானத்தைப் பார்க்கவில்லையா வானம் எனக்குத் தப்பித்து எங்கோ ஒளிந்துகொண்டதா என்று புரியவில்லை. எப்படியோ, நாங்களிருவரும் பலநாள் சந்தித்துக்கொள்ளவில்லை என்பதுமட்டும் உண்மை.

3 comments:

Balaji-Paari said...

அன்பு நண்ப,
வான் பெரிது. உங்கள் இடுகை எனக்கு சுரீர் என்றது. எனது நண்பர் அவ்வப்போது எனக்கு வானத்தையும் அதன் நீலத்தையும் காட்டுவார், சில மலர்களின் பிண்ணணியுல். அவையும் அழகு.

Anonymous said...

இதுக்குத்தான் சொல்றது, ரொம்ப யோசிக்காதே :)
கை எது கால் எதுனாவது சரியா தெரியுதா இப்போ :)

Pavals said...

எப்பப்பாரு வேலை, வேலைன்னு இருக்காதீங்க சார், அப்படியே கொஞ்சம் இந்த ஸ்க்ரீனை பார்க்கிறதை விட்டுட்டு எங்கனா வெளிய போயிட்டு வாங்க, இல்லைன்ன இப்படித்தான்.. :-)

//சட்டென்று ஒரு துக்கம்..

இதை படிச்சதும், ஒருதடவை ஓடிப்போயி வானத்தை பார்த்துட்டு வந்தேன்