இந்த வார டைம் பத்திரிகையில், அட்டைப்படக் கட்டுரை, 'The God gene' என்பது. பக்தி என்பதைச் செலுத்தும் விசையாகச் சில குறிப்பிட்ட மரபணுக்கள் (genes) இயங்குகின்றதா என்பதைப்பற்றி எழுதப்பட்ட கட்டுரை. பதிப்புரிமைச் சிக்கல்கள் வரக்கூடுமென்பதால் நேரடியாக இணைப்புக் கொடுப்பதைத் தவிர்க்கிறேன். கொடுத்துள்ள இணைப்புவழி, எந்த இதழ் என்று அறியமுடியுமே தவிர, கட்டுரையைப் படிக்கமுடியாது. கட்டுரை, டீன் ஆமர் (Dean Hamer) என்ற அமெரிக்க தேசியப் புற்றுநோய் நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானியின் 'The God gene' என்ற புத்தகம் முன்வைக்கும் கருத்துக்களை விவாதிக்கிறது. புத்தகத்தை இன்னும் நான் படிக்கவில்லை. படித்தபின் ஒருநாள் மறுபடி எழுதுகிறேன். ஆனாலும், கட்டுரை, அவரது கருத்தை ஒத்துக்கொள்கிறதா இல்லையா என்ற கேள்வியைத் தவிர்த்துவிடுகிறது.
கட்டுரை, மதநம்பிக்கை, ஆன்மீகம் இரண்டையும் பிரித்து, 'ஆன்மீகம்' என்பதைக் கட்டுப்படுத்தக்கூடிய மரபணுக்கள் இருக்கின்றன என்று ஆமர் கூறுவதாகக் குறிப்பிடுகிறது. இதை நான் நம்புகிறேனா இல்லையா என்பதைக் கூறவேண்டுமானால்: இல்லை. இல்லை என்பதை, என் காலத்தில் நின்றுகொண்டு, என் அறிவுக்குட்பட்டுக் கூறமுடியும். அறிவியல் சோதனைகளில், குறிப்பாக இதுபோன்ற சோதனைகளில் confounding variables கணக்கற்று இருக்கும். அதைத் தவிர்க்க, இரட்டைப்பிறவிகளில் இதுபோன்ற சோதனைகள் மேற்கொள்ளப்படும். ஆன்மீகம் போன்ற சோதனைகளில், ஒரே இடத்தில் பிறந்து வெவ்வேறு இடங்களில், வளர்ப்புமுறைகளின்கீழ் வளர்ந்த/ஒரே இடத்தில் பிறந்து ஒரே இடத்தில், வளர்ப்புமுறைகளின்கீழ் வளர்ந்த ஓரண்ட இரட்டையர்களின் (monozygotic twins) பழக்கவழக்கங்களை ஆராய்வதன்மூலம், மரபணுக்கள்*சுற்றுச்சூழல் என்ற இரு முக்கியக் காரணிகள் எந்த சதவீதத்தில் ஒரு மனிதனைப் பாதிக்கின்றன என்று ஆராய முடியும். இது, பலகாரணி நோய்களில் (multifactorial diseases) உபயோகப்பட்டாலும் (உடல்பருமன், டயாபடீஸ், ஆஸ்துமா போன்றவை உதாரணங்கள்), 'ஆன்மீகம்' என்ற nebulous விஷயத்துக்கு இந்த reductionistic approach எப்படிப் பொருந்துமென்று என்னால் இப்போதைக்கு கற்பனைசெய்ய இயலவில்லை. பின்பொருநாள் அந்தப் புத்தகத்தைப் பார்த்துவிட்டு எழுதலாமென்று நினைக்கிறேன். வெறும்சரடு உபயோகமில்லை.
இதைப் படித்தபோது, எப்படி ஒவ்வொரு அழகியல் ஊகங்களும் (aesthetic speculations) விஞ்ஞானத்தினால் மறுதிருத்தம் செய்யப்படுகின்றன என்று தோன்றினாலும், அறிவியல் என்பது நிரூபணத்துக்கே பெரும்பாலும் உதவுகிறது - ஆதியிலிருந்தான ஒரு concept ஐ அதனால் சமைக்க முடியாது என்றே தோன்றும். இதுபற்றிய விவாதங்களை நான் அதிகம் படித்திராததால் இந்தக் கருத்து எவ்வளவு நியாயமானது என்று தெரியவில்லை. மனிதன் பறக்க முடியாது - மனிதன் பறந்தான்; நவக்கிரகங்கள் - ஒன்பது கோளங்கள்; உணர்வுகள் - neurotransmitter cocktail; இதுபோன்று எத்தனை விஷயங்கள் - ஆனால், ஒன்றில்லாமல் மற்றொன்றில்லை தான். இதற்கு ஒரு நல்ல உதாரணம், ஜூலியோ கொர்த்தாஸர்(hoolio என்ற உச்சரிப்பை அடிக்கமுடியவில்லை), தனது 'Hopscotch' புதினத்தில் ஒரு footnote ஆக, அப்போது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுக்கொண்டிருந்த 'உணர்வுகளின் விஞ்ஞானரீதியான விளக்கத்தை'க் குறிப்பிட்டிருப்பார். Hopscotch முழுவதுமே ஒரு highly emotional புத்தகம் என்பதால், அதற்குள் இதைப் படிக்கும்போது, ஒரு அழகியல் மனம் விஞ்ஞானத்தை எவ்வளவு தயக்கத்துடன் அணுகுகிறது - இவ்வளவு காலமும் மனம் ஆராதித்த உணர்வுகள் வெறும் வேதிச்செயலா என்று நம்பமறுக்கிறது என்பதும் மிகத் தெளிவாகப் புலப்படும்.
Wednesday, October 20, 2004
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
இந்தப் பதிவிற்கு நன்றி. டைம் படித்துவிட்டு பதிக்கிறேன். ஆனால் தடாலடியாக ஜீன் -> ஆன்மீக உணர்வு எனும் ஒரு தாவல் எந்த அறிவியல் reductionism படியும் நம்பக்கூடியதாக இல்லை. இன்னும் மூளை -> நினைவுகள் -> உணர்வுகள் -> குணங்கள் -> ஆன்மீகம் போன்ற உயர்குணக்கட்டுகள் என்று பல படிகளில் reductionism செயல்பட வேண்டும். வெள்ளைக்கார விஞ்ஞானிகள் மண்டை அளவு -> மூளை அளவு -> அறிவு வளர்ச்சி என ஒரு நூற்றாண்டுகளுக்கு முன் போன அதே பாதைதான் இது. இது தொடர்பாக நேற்றைய nature இணைய பக்கத்தில் இருக்கும் தலையைச் சுற்றி தென்படும் புனிதஒளி (halo) பற்றிய குறிப்பையும் பார்த்து விடுங்கள். சுவையானது.
அருள்
Post a Comment