நான் கொடுத்துள்ள இணைப்பு வழி க்ரட்டோலின் முழுக் கட்டுரையையும் படிக்க முடியும். அந்தக் கட்டுரை, ஆங்கிலத்தை மையமாகக் கொண்டு, மற்ற மொழிகளைப்பற்றி எழுதப்பட்டது. ஆங்கிலத்தின் impact factor அவ்வளவு அபரிமிதமாக இருப்பதற்குக் காரணம் அது ஒரு hybrid மொழி என்பதால்தான். மரபியலில் 'hybrid vigor'என்று ஒரு பதமே உண்டு. உதாரணத்துக்கு, 'தேடுதல்' என்ற வார்த்தை, கிட்டத்தட்ட 'Google'என்று ஆகிவிட்டது.ஒவ்வொரு வருடமும் பல புதிய வார்த்தைகள் ஆங்கில அகராதிகளில் சேர்க்கப்படுகின்றன. தமிழ் அளவுக்கு அதில், பேச்சுக்கும் எழுத்துக்குமான dichotomy அதில் இல்லை. நான் தமிழில் மிக ஆர்வம் உள்ளவனே. ஆனால் இந்த இடுகையில் உபயோகப்படுத்தியுள்ள ஆங்கிலச் சொற்களளவு வாசகப் பரிச்சயமுள்ள தமிழ்ச் சொற்கள் எனக்குச் சிக்காதது என் குறைபாடால்கூட இருக்கலாம்.
இந்தக் கட்டுரை ஆங்கிலத்தைப் பற்றிக் குறிப்பிடும் மற்றொரு விஷயத்தையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும் - சிலபல வருடங்களில் ஆங்கிலம், டைப்ரைட்டிங், கணினித் திறமைகள் போல ஒரு basic skill ஆகிவிடும் என்றும், அப்போது பல மொழிகள் தெரிந்தவர்கள், வெறும் ஆங்கிலம் தெரிந்தவர்களைவிட அனுகூலமுடையவர்களாயிருப்பார்கள் என்றும் கூறுகிறது. தமிழ் என்ற வார்த்தை ஒன்றிரண்டு முறை மட்டுமே கூறப்படுகிறது, இது தமிழ் பற்றிய கட்டுரையும் அல்ல.
மொழி hybridise ஆகியே தீருமென்பது காலத்தின் விதி. 'Survival of the fittest' என்பது 'வலிமையுள்ளவன் வாழ்வான்'என்பதல்ல என்பதாலும், அது 'Survival of the most adaptable'என்பதையே குறிக்கிறது என்பதாலும், தமிழ் எங்கே போகிறது என்பதை நாம் பார்த்துவிடுவோமென்று நினைக்கிறேன். அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி இருக்கவேண்டும் - அரசியல் தமிழும் சினிமாத் தமிழும் மட்டும் வளராமல், அறிவியல் தமிழும் வளரவேண்டும். பொறியியலில் தமிழ்ச்சொற்கள் பரிச்சயமாகியுள்ள அளவு (குறைந்தபட்சம் கணிப்பொறித் துறை) உயிரியல் துறைகளிலும் பிற துறைகளிலும் பரிச்சயமாகவில்லை என்பதே என் கருத்து. அறிவியலுக்கு ஊடகங்கள் ஒதுக்கும் இடம் மிகக் குறைவு. அவையும் வெறும் 'report' அளவிலேயே இருக்கின்றன தவிர, சுவாரஸ்யமான வகையிலான 'instructional scientific feeding' ஐ,சுஜாதா தவிர யாரும் செய்ததாய்த் தெரியவில்லை.
Tuesday, October 05, 2004
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
கட்டுரையினைப் பற்றி அருமையாக கூறியுள்ளீர்கள்... ஆனால் அந்த கட்டுரைக்கான சுட்டியினை கொடுக்க மறந்து வீட்டீர்கள் போல.
சந்தோஷ்,
அந்தக் கட்டுரைக்கான இணைப்பு என் முந்தைய இடுகையில் இருந்தது. இருந்தாலும், இதிலும் இணைப்புக் கொடுத்துள்ளேன் இப்போது - pdf வடிவத்தில்.
கட்டுரையைப் பற்றிய உங்கள் குறிப்பு நன்று. நன்றி, அந்தக் கட்டுரைக்கான இணைப்பையும் கொடுத்தமைக்கு.
Post a Comment