Wednesday, October 27, 2004

ரசிகனானேன்.....


Girl with a pearl earring













ரொம்ப நாள் கழித்து சமீபத்தில் ஒரு நடிகையின் ரசிகனானேன். குஷ்பு அலையின் நடுவில் அமலா, கௌதமி, என்று மைனாரிட்டி நடிகைகளின், மற்றும் மது சாப்ரே, கேட் மாஸ் போன்ற மைனாரிட்டி மாடல்களின் ரசிகனாக பள்ளி, கல்லூரிக்காலங்களில் இருந்தபிறகு ஒரு சின்ன இடைவெளி. அதன்பிறகு இந்த நடிகை - இவளது இரண்டு படங்கள் பார்த்திருக்கிறேன், இரண்டும் மிகவும் பிடித்துப்போனது. முதலாவது Lost in Translation. ஜப்பானில் சற்றுநாள் தங்கியிருக்கும் இரு அமெரிக்கர்கள் மொழி, கலாச்சாரம் புரியாமல் தடுமாறுவதை விவரிக்கும் ஒரு மெலிதான நகைச்சுவைப் படம், மற்றொன்று, யான் வெர்மீர் என்ற டச்சு ஓவியரின் புகழ்பெற்ற ஓவியமான Girl with a pearl earring பற்றியது. அந்த ஓவியத்துக்குப் பாவனைசெய்த பெண் நிஜத்தில் வெர்மீர் வீட்டுப் பணிப்பெண் என்ற ஊகத்தை அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்ட படம். இதன் விமர்சனங்களில் ஒன்றின் ஒரு வாக்கியம், 'படம் பார்த்தபோது ஓவியம் காய்ந்துகொண்டிருந்த உணர்வே இருந்தது' என்றது. DVD பார்க்கும் வாய்ப்புள்ளவர்கள் தயவுசெய்து பார்க்க முயலவும், VHS ஐத் தவிர்த்துவிடுங்கள்: அப்படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமும் ஓவியம் போலவே இருந்தது என்றால் அது மிகையல்ல...ஆலந்தில் நடக்கும் கதை என்றே தோன்றாமல் ஏதோ நம் ஊர்ப் பச்சைப் பசுமைகளைப் பார்த்தது போலொரு உணர்வு. ஸ்கார்லெட் யோகன்ஸ்ஸன் என்ற இந்த நடிகையைத் திடீரென்று பிடித்துப்போனது படத்தினாலா அல்லது படங்கள் பிடித்துப்போனது அவளாலா என்று தெரியவில்லை. Mission Impossible 3 படத்திலும் இவள் இருப்பதால், அப்போது தெரிந்துவிடும் எதால் எதைப் பிடித்ததென்று.

5 comments:

Boston Bala said...

Lost in Translation படம் பிடித்திருந்ததா? ஹீரோயின் காரணத்தை விடுங்கள்; கடைசி சீனில் என்ன பேசியிருப்பார்கள் என்பதையும் விட்டுவிடலாம். அது தவிர என்ன ரசிக்கப்பட்டது?

Anonymous said...

I too liked 'Lost in Translation' specifically its subtle depiction of the middle age crisis and for reminding my first weekend in Mumbai.

You might like 'Frida' and 'Artemisia', especially Frida as it has the same 'painting like' cinematography.

-dyno

சன்னாசி said...

ஃப்ரைடா காலோ எனக்கு மிகவும் பிடித்த ஓவியர்களில் (ஓவியை? ஓவியருக்குப் பெண்பால் உண்டா?)ஒருவள். 'ஃப்ரைடா' படமும் பார்த்துவிட்டேன்; சல்மா Haயக்கும் பிடிக்கும் என்றபோதும், அவளது உயரம் பத்தவில்லை. நிஜத்தில் ஃப்ரைடாவுக்கு லேசான ஆண்மைச்சாயல் உண்டு, சல்மா Haயக்கின் உடலமைப்பு ஃப்ரைடாவுக்கு நேரெதிர். ஆனாலும், படம் பிடித்தே இருந்தது.ஃப்ரைடாவைவிட, அவளது கணவன் டீகோ ரிவியேரா பாத்திரத்தில் நடித்த ஆல்ஃப்ரெட் மோலினா (Spiderman 2 வில் டாக்டர் ஆக்டோபஸ்), அச்சு அசலாக டீகோ போலவே பட்டதற்குக் காரணம், அவரை நிஜவாழ்வில் ஃப்ரைடா கிரகணித்துவிட்டதுதானென்று நினைக்கிறேன்! அதனால், மோலினா, ரிவியேரா போல இல்லாமல் போயிருந்தாலும் நான் கவனிக்கத் தவறியிருப்பேன்.

மற்றபடி, அதுவும், லத்தீன் அமெரிக்க நிலப்பிரதேச வர்ணங்களுடன் அற்புதமாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட படம் என்றாலும், அதன் பாத்திரங்கள் அனைவரும் larger than life பாத்திரங்கள். டீகோ ரிவேரா, நியூ யார்க்கில் ராக்கஃபெல்லர் மையத்தின் மத்தியில் கம்யூனிஸ ஓவியத்தை வரைந்த ஆள்,ஃப்ரைடாவுக்கும் ஜோஸஃப் ட்ராட்ஸ்கிக்கும் காதல் இருந்தது - என்ற விதத்தில் இருந்த அரசியல் தொடர்புகள் - ஏதும் 'முத்துத் தோடு' படத்தில் இல்லை.'ஃப்ரைடா' வில் மிக அழகான காட்சி, விபத்து ஏற்படும்போது தங்கத் துகள்கள் பறப்பது. இதுவும் அவளது வாழ்க்கைக் கதையான 'Frida' வில் சொல்லப்பட்டிருப்பதே (Biographer: Hayden Herrera)........

ஆர்ட்டிமீஸியா இன்னும் பார்க்கவில்லை...உண்மையில் கேள்விப்படவில்லை, முயன்று பார்க்கிறேன்.

Lost in Translationல் என்ன பிடித்திருந்தது? எனக்கே தெரியவில்லை. ஒருவகையில் தனிமையில் உழலும் அந்த இருவரும் எனக்கு மிகவும் பரிச்சயமானவர்களாகப் பட்டதாலோ என்னவோ?!

Balaji-Paari said...

நீங்க சொன்ன படங்கள்ல ஒண்ணுதான் கேள்விப்பட்டிருக்கன். ஆனா அம்மிணிய பார்த்த உடனே தோணினது " பார்த்த விழி பார்த்தப்டி..."
(குணா நாயகி)

சன்னாசி said...

குணா நம்ம ஃபேவரைட் படங்களில் ஒண்ணு! அதனால் நீங்க சொல்வதை வழிமொழிகிறேன், பாலாஜி.