Monday, October 04, 2004

அந்துமணியின் உளறல்கள்

அந்துமணியின் முட்டாள்தனமான வாரமலர் உளறல்கள் நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டே போகிறது. 'தமிழுக்காக ஒரு இருக்கை உலகப் பல்கலைக்கழகங்களில் தொடங்கப்படுமாம், அது என்ன இருக்கையோ' என்ற ரீதியில் சலித்துக்கொண்டிருக்கிறார்!?? பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டது போல. ஒவ்வொரு முறையும் இந்தமாதிரி ஏதாவது பொறுப்பற்ற டப்பா கமெண்ட்டுகளைப் படிக்கும்போது ஏற்படும் கடுப்புக்கு அளவில்லை. தமிழைச் செம்மொழியாக்கியதிலுள்ள அரசியலைத் தவிர்த்துவிட்டால், அது வாழ உதவவேண்டாமா? Tamil Chairs ஐ உருவாக்குவது மொழியை மேலும் நிலைப்படுத்தவே உதவும். லென்சு மாமாவும் அந்துமணியும் எதையோ சொறிந்துகொண்டு இந்தமாதிரி உளறுவதற்குப் பதிலாக, அறிவியல் உலகத்தின் தலையாய இரண்டு அறிவியல் ஆராய்ச்சிப் பத்திரிகைகளுள் ஒன்றான Science ல் வெளியான மொழியியல் கட்டுரையான 'மொழியின் எதிர்காலம்' பார்வைக்கூற்றைப் பார்த்தால்ஏதாவது உபயோகமாயிருக்கும். பெங்காலி, தமிழ், மலாய் மூன்றையும் உலகில் மிக வேகமாக வளரும் மொழிகளாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இதெல்லாம் நமக்கு எதுக்கு அந்துமணி சார், சோறு இருந்தால் போதாதா? பொதுஜனத்திலிருந்து உங்களை வித்தியாசப்படுத்திக்கொள்ள நீங்கள் உபயோகிக்கும் ஆயுதம் உங்களது மெனு தானோ! 'ஆ, அந்துமணி பெரிய ஆளுப்பா, என்ன மாதிரியெல்லாம் சாப்புடறாரு பாரு' என்று கூறவேண்டும் வாரமலர் படிக்கும் மகாஜனங்கள்! யார் எவ்வளவு கத்தி என்ன பயன்? எருமை மாட்டு மேல் மழை பெய்த மாதிரிதான் - அந்துமணி தன் உலகப் பார்வையை நமக்குக் கொடுத்துக்கொண்டேயிருப்பார், என்ன உளறுகிறார் என்று பார்த்து பதிலுக்குக் கடிப்பதற்காகவாவது அந்தக் குப்பைகளைத் தொடர்ந்து படித்துத் தொலையவேண்டியதாயிருக்கிறது...

இதைப் போஸ்ட் செய்ய ஏன் கஷ்டமாயிருக்கிறது இன்று?

4 comments:

Badri Seshadri said...

1. சில சமயம் bloggerஇல் போஸ்ட் செய்வது கஷ்டமாக இருக்கும். அப்பொழுதெல்லாம் நான் செய்வது தலைப்பில் சில ஆங்கில வார்த்தைகளைப் புகுத்துவதே. When you have "Archive by individual post" option enabled and the title field is a bunch of unicode characters, blogger attempts to come up with numerical string to make up the file name. There may be some bug in their algorithm doing this. However whenever you have any english word (basically any roman alphabetical string), the individual post will be named by a combination of that string, and that usually works fine.

2. அந்துமணி! தான் பெரிய 'முடி' என்ற நினைப்பில் எழுதுகிறார். தமிழ் செம்மொழியைத் தாண்டி மற்ற இரண்டு விஷயம் கூட கடுப்பேத்துவதுதான். தான் பெரிய ஆள் என்றும் தன்னை கலாம் கெஞ்சி வேண்டி தான்சானியா வா என்று கூப்பிட்ட மாதிரியும்... ஓசிப் பயணம் கிடைக்காதா என்று காத்துக்கொண்டிருக்கும் கேஸ்கள். அதே மாதிரி பியூன், ஆபீஸ் பாய், அட்டெண்டர் என்பதை விட "தொண்டர்" என்பது எந்த வகையில் உசத்தி? தொண்டர் என்றால் கிட்டத்தட்ட அடிமை என்பதுதானே பொருள்? தொண்டு செய்தல் என்றால் காசு கூட வாங்காது வேலை செய்தல்தானே? [கடவுள் தொண்டு எனும்போதோ, அல்லது குரு/பெரியவர்கள்/ஏழைகளுக்குச் செய்யும் தொண்டு எனும்போது மட்டும்தானே அது உயர்வாகிறது?]

ரவி ஸ்ரீநிவாஸ் said...

i also wanted to write about this.but since u have written i will not do that.do see my post today in my blog.

சன்னாசி said...

நன்றி பத்ரி - நான் ஒரு டெக்னிக்கல் ஸீரோ! அதனால் அனைத்து ஆலோசனைகளும் appreciate செய்யப்படுகின்றன.

Kasi Arumugam said...

இந்த 'மொழியின் எதிர்காலம்' பற்றி என் கருத்துக்கள் சில இங்கே :

http://kasi.thamizmanam.com/index.php?itemid=52

http://kasi.thamizmanam.com/index.php?itemid=65

(எத்தனை எழுதினாலும் தினமலர் திருந்தப்போவதில்லை)