Monday, October 18, 2004

இரண்டு தலைச் சிக்கல்

இது கொஞ்சம் பழைய செய்தியே, இருந்தாலும், படித்தபோது படு சுவாரஸ்யமாக இருந்தது. டரியோ ஃபோ, 1997ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வாங்கிய இத்தாலிய நாடகாசிரியர். அவரது Two headed anomaly என்ற நாடகத்தைப்பற்றிய பதிவே இது... அந்த நாடகத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்குமா என்று தெரியவில்லை (குறைந்தபட்சம் உள்ளூர் version ஆவது....), இருந்தாலும், அதன் கதைக்களனே சுவாரஸ்யமாயிருந்தது.

சில்வியோ பெர்லுஸ்கோனியும் விளாதிமிர் புட்டினும் சந்திக்கிறார்கள். திடீரென்று ஒரு தீவிரவாதி நுழைந்து சுட ஆரம்பிக்கிறான்...புட்டின் காலி, பெர்லுஸ்கோனிக்குள்ளும் சில குண்டுகள் - ஆஸ்பத்திரி ----- டாக்டரின் diagnosis இது: ஏதாவது ஒரு அதிசயம், அல்லது இறந்த புட்டினின் மூளை - இவற்றில் ஒன்றே பெர்லுஸ்கோனியைக் காப்பாற்ற முடியும்! அனைவரின் சம்மதத்துடன், புட்டினின் மூளையை பெர்லுஸ்கோனியின் தலைக்குள் பொருத்திவிடுகிறார்கள்! பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் நாடகம்! பெர்லுஸ்கோனி வாட்கா குடிக்கிறார், கராத்தே கற்றுக்கொள்கிறார் (புட்டின், முன்னாள் சோவியத் யூனியனின் KGB இயக்குனராக இருந்தவர் என்பதையும், பெர்லுஸ்கோனி சமீபத்தில்தான் face-lift, அட, குறிப்பாகச் சொல்லப்போனால், தாடை-lift செய்துகொண்டவர் என்பதையும் நினைவில் கொள்க), செசன்யாவை ஐரோப்பியக் கூட்டமைப்புக்குள் தள்ளுகிறார்!!

முன்பு ஃபோவின் Accidental death of an anarchist படித்தபோது (நாடகத்தைப் படிப்பதில் என்ன கிடைத்துவிடும்? பார்க்காத வரையில்..) ஏதோ சீரியஸாக இருந்தது - ஆனால் - இந்தக் கதைக்களத்தை நம்மூருக்குப் பொருத்திப் பார்த்தால் - கருணாநிதியின் தலைக்குள் ஜெயலலிதாவின் மூளை!?!??!
ஜெயலலிதாவின் தலைக்குள் கருணாநிதியின் மூளை என்று முயன்று பார்த்தேன், ஆனால்.....திராவிடக் கட்சி மூளைகள் அனைத்தும் ஒருவகையில் homogenized ஆக இருப்பதாகத் தோன்றுகிறது. எந்த மூளையை எந்தத் தலைக்குள் பொருத்தினாலும் நடப்பது ஒன்றாகவே இருக்கும் என்பது என் அனுமானம்!! அதனால் அத்தனை சுவாரஸ்யமாக இருக்குமென்று தோன்றவில்லை. வேறு யாருக்காவது மூளை swap அல்லது மூளை transplant ஐடியாக்கள் தோன்றுகிறதா?

2 comments:

Anonymous said...

கரன் தபார் தலைக்குள் அம்மா மூளை
சந்திரபாபு தலைக்குள் சாவக்கர் மூளை
கருணாநிதி தலைக்குள் இராம கோபாலன் மூளை
தக்காரே தலைக்குள் தமிழரசன் மூளை
ராமதாஸ் தலைக்குள் கிருஷ்ணசாமி மூளை
ரஜனி ராம்கி தலைக்குள் ராமதாஸ் மூளை
அருண் வைத்யநாதன் தலைக்குள் கருணாநிதி மூளை
அநாதை ஆனந்தன் தலைக்குள் சோ மூளை
ரவி ஸ்ரீனிவாஸ் தலைக்குள் ஜெயமோகன் மூளை
இராமகி தலைக்குள் வையாபுரி பிள்ளை மூளை
ஈழநாதன் தலைக்குள் கார்த்திகேயன் மூளை
ராஜ்குமார் தலைக்குள் ஜோதிபாசு மூளை
தங்கமணி தலைக்குள் இந்து ராம் மூளை
பெட்டை தலைக்குள் அகலிகை மூளை
மேல்kind தலைக்குள் மாலா மைத்ரி மூளை
கொஸப்பேட்டை குப்ஸாமி தலைக்குள் நன்னன் மூளை
அம்மா தலைக்குள் ஆட்டுமூளை
உங்க தலைக்குள் அந்துமணி மூளை
என் தலைக்குள் ஒரு தோட்டா துளை

சன்னாசி said...

எல்லாம் சரி, நான் என்ன பாவம் செய்தேன்!!!