நெப்போலியன்
-மிரொஸ்லாவ் ஹோலுப்
குழந்தைகளே
நெப்போலியன் போனபார்ட் எப்போது பிறந்தார்
ஆசிரியர் கேட்டார்
ஆயிரம் வருடங்களுக்கு முன்பு என்றார்கள் சிறுவர்கள்
ஒரு நூறு வருடங்களுக்கு முன்பு என்றார்கள் சிறுவர்கள்
யாருக்கும் தெரியவில்லை
குழந்தைகளே, என்னசெய்தார்
நெப்போலியன் போனபார்ட்
என்று ஆசிரியர் கேட்டார்
ஒரு போரில் வென்றார் என்றார்கள் சிறுவர்கள்
ஒரு போரில் தோற்றார் என்றார் சிறுவர்கள்
யாருக்கும் தெரியவில்லை
என் கசாப்புக் கடைக்காரனிடம் ஒரு நாய் இருந்தது
என்றான் ஃப்ராங்க்கிஷெக்
அதன் பெயர் நெப்போலியன்
அதை அவன் அடிக்கடி அடிப்பான்
ஒரு வருடம் முன்பு
அந்த நாய் இறந்தது
பட்டினியால்
இப்போது சிறுவர்களெல்லாம் வருத்தப்பட்டார்கள்
நெப்போலியனுக்காக
தமிழில்: சில வருடங்களுக்கு முன்பு வெளியான "யாதுமாகி" பத்திரிகையின் ஒரு இதழில் படித்துக் குறித்துவைத்தது. மொழிபெயர்த்தது எவரென நினைவில்லை...
Czechகிலிருந்து ஆங்கில மொழிபெயர்ப்பு வடிவத்தில்:
NAPOLEON (Miroslav Holub)
Children, when was
Napoleon Bonaparte born,
asks teacher.
A thousand years ago, the children say.
A hundred years ago, the children say.
Last year, the children say.
No-one knows.
Children, what did
Napoleon Bonaparte do?
asks teacher.
Won a war, the children say
Lost a war, the children say
No one knows.
Our butcher had a dog
Called Napoleon,
Says Frankisek
The butcher used to beat him and the dog died
of hunger
a year ago.
And all the children are now sorry
for Napoleon.
Saturday, March 12, 2005
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
கவிதைப்பொருள் பிடித்திருக்கின்றது.
'பிரபாகரன்' என்ற தலைப்பிட்டு சுகன் இதை 'கறுப்பு' தொகுப்பில், 'மூன்றாங்கையாக தழுவி' இருந்தார்!
'பிள்ளைகாள்
வேலுப்பிள்ளை பிரபாகரன் எப்போது பிறந்தான்'
என்று தொடங்கும் அது..
பெயரிலி: மிக எளிமையானதெனினும், என்றாலும், முதல் வாசிப்பிலேயே நினைவில் தங்கிவிட்ட கவிதை; இளையராஜாவின் உடைந்த குரலில் தொடங்கும் 'சோலைப் பசுங்கிளியே சொந்தமுள்ள பூங்கொடியே ஈச்ச இளங்குருத்தே எந்தாயி சோலையம்மா' பாடலின் பல்லவி மாதிரி.
பொடிச்சி: இந்தத் தகவல் எனக்குப் புதிது. குறிப்பிட்டதற்கு நன்றி...
இந்தக் கவிதையை நான் இந்திரன் தொகுத்த 'அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்' தொக்குப்பிலோ அல்லது 'பனிதல் மறந்தவர்' என்ற இன்னொரு கவிதைத் தொகுப்பிலோ படித்ததாக நினைவு. எனக்கு பிடித்த கவிதை. இந்த இரு தொகுப்புகளும் எனக்குப் பிடித்தவையே! நன்றி மாண்ட்ரீஸர்!
நல்லாயிருக்கு.
நம்ம ஊரு இளைஞர்கள் கிட்ட 'நெப்போலியன்' எங்கிருக்கிறானென்று கேட்டால் 'டாஸ்மாக்' கடையில் என்பார்கள்.
சீரியச விவாதம் பண்ணும் போது இது என்ன குறுக்கே..... டேக் இட் ஈஸி.
நல்ல கவிதை.
விஜய், அது மட்டுமா சொல்லுவாங்க, 'நெப்போலியன் விருமாண்டில கலக்குவார்'ன்னும் சொல்லுவாங்க!
விஜய்: அந்த நெப்போலியன் ஒரு hangover நெப்போலியன். அதனால் நான் போடுவது ஓ அல்ல, ஒ. ஒழிக!!
Post a Comment