Monday, November 01, 2004

கவர்னர் மாற்றம்...

ஜெயலலிதா சிவராஜ் பாட்டீலுடனான உரையாடலைப் பதிவுசெய்தாரா இல்லையா என்பது வேறு விஷயம். அருண் வைத்தியநாதன், ஜெயலலிதாவிடம் பிடித்த ஐந்து விஷயங்களைப் பட்டியலிட்டிருக்கிறார். எனக்கு ஜெயலலிதாவிடம் பிடிக்காத விஷயங்கள் ஆயிரம் இருந்தாலும், ஒரு விஷயத்தில் மிகுந்த மதிப்புண்டு. அவரது மிகப்பெரிய சாதனை, கருணாநிதியையும் தன்போல மாற்றிவிட்டதுதான்! பதினெட்டு மாதங்களாக வாஜ்பாயியை ஜெயலலிதா பிரேக் டான்ஸ் ஆடவைத்தது போல இப்போது கருணாநிதியும் செய்ய முயல்கிறார் - வித்தியாசம், தமிழ்நாட்டு அரசை. சற்றுக் காலம் குட்டையில் ஊறிக்கொண்டிருந்த மட்டைகளிரண்டும் வித்தியாசமாக இருப்பதுபோல் பட்டது, இப்போது ஒரு மட்டை, மற்றொரு மட்டையையும் தன்போல் மாற்றிவிட்டது. அவ்வளவே! கருணாநிதி மட்டும் மஞ்சத் துண்டைத் தூக்கிப்போட்டுவிட்டு பச்சைத் துண்டைச் சுற்றிக்கொண்டால் அம்சமாக இருக்கும். தன் பாணி அரசியல் பைசா பிரயோஜனம் பெறாது என்று கருணாநிதிக்குப் புலப்பட்டதே சமீபகாலத்தில்தான் என்று நினைக்கிறேன்.

கவர்னர்களைப்பற்றி ஜெயலலிதா?! ஆண்டவா! இப்போது சிவலோகத்திலிருக்கும் சென்னா ரெட்டியை யாராவது அழைத்துவந்தால் அவர் சொல்லுவார் கதை கதையாய்! 'என்னிடம் ஆளுநர் தவறாக நடந்துகொண்டார்' என்றது ஒருவேளை வேறு ஜெயலலிதாவாக இருக்கும்.

3 comments:

Mookku Sundar said...

அம்சமா சொன்னீங்க தமிழ்ப் பாம்பு..,

Arun Vaidyanathan said...

:))
Why Mookaan is calling you as Tamiz Paampu :)

சன்னாசி said...

தமிழ்ப்பாம்பு என்று என் பெயர் 'தமிழ்மண'த்தின் பட்டியலில் உள்ளது. அதுவும் புனைபெயர், Montresor என்பதும் புனைபெயர் என்பதால்,எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளலாம். அனாமதேயமே ஆனந்தம் (Anonymity is bliss)!!