நேற்று மூன்று மணி வரை தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தேன். எனது பட்சி சொன்னதுபோல, புஷ் 'வெற்றிவாகை' சூடினார். சும்மா ஓஹையோ ஓஹையோ என்றாலும், இது ஏதும் விட்டலாச்சார்யா படம் அல்ல என்பதையும், பிற சில விஷயங்களையும் நினைவில் கொள்ளவேண்டும்.
1) புஷ் பெற்ற மொத்த ஓட்டுக்கள் (popular vote) கெர்ரியைவிட மூன்று மில்லியன் அதிகம்
2) Electoral vote எண்ணிக்கையிலும் புஷ்ஷே வெற்றி பெறுவார்
3) அமெரிக்க செனட் தேர்தலில் குடியரசுக் கட்சி இப்போது பெரும்பான்மை பெற்றுள்ளது
4) அமெரிக்க காங்கிரஸிலும் குடியரசுக் கட்சியே இப்போது பெரும்பான்மை பெற்றுள்ளது
ஆக மொத்தம், இது குடியரசுக் கட்சிக்கும் புஷ்ஷுக்கும் ஒரு clean sweep. ஜனநாயகக் கட்சிக்கும், அதற்கு ஓட்டளித்தவர்களுக்கும் மரண அடி. அனைத்தும் இப்போது குடியரசுக் கட்சியின் பிடிக்குள் இருப்பதால், புஷ் எடுக்கும் எந்தவொரு முடிவும் எதிர்ப்பில்லாமல் நிறைவேற்றப்படும்.
ஓரினச்சேர்க்கையாளர்களுக்கெதிரான சட்டத்திருத்தம், கருக்கலைப்புக்கெதிரான சட்டங்கள், embryonic stem cell ஆராய்ச்சிக்கு முட்டுக்கட்டை, மறுபடியும் பணக்காரர்களுக்கே வரிக்குறைப்பு (இதை மட்டும் என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை), தற்போதைய வெளியுறவுத் திட்டங்களின்மீதான கூடுதல் thrust ... ஆகமொத்தம், அமெரிக்க 'பைபிள் பெல்ட்' டின் கருத்தாக்கங்களனைத்தும் ஒரு பெரும் தாண்டவத்துக்குத் தயாராகின்றன என்று நினைக்கிறேன். ஆனாலும், அதுதான் தங்களுக்கு வேண்டுமென்று அமெரிக்கர்கள் தீர்மானித்திருப்பதால், அதைப்பற்றிக் கருத்துக்கூறும் உரிமை எனக்கில்லை என்று நினைக்கிறேன்.
எனக்கு மிகவும் வினோதமாகப் பட்ட விஷயம், இந்தமாதிரி விமர்சனம் செய்யப்பட்ட புஷ்ஷையே ஜனநாயகக் கட்சியால் தோற்கடிக்கமுடியாமல் போனால், இனி எந்த குடியரசுக் கட்சி வேட்பாளர்களை இவர்களால் தோற்கடிக்கமுடியும் என்று தோன்றுவதுதான்! ஜனநாயகக் கட்சிக்கு ஓட்டளித்தவர்கள், தாங்கள் கையாலாகாதவர்களாக, disenfranchise செய்யப்பட்டவர்களாக உணர்வது தவிர்க்கமுடியாது. அவர்களுக்குத் தோன்றும் மனோநிலை வெறுமையை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது. ஃப்ளோரிடா, சென்றமுறையும் புஷ்ஷூக்குத்தான் ஓட்டளிக்க நினைத்திருக்கிறது என்பதை, புஷ்ஷுக்குக் கிடைத்த வெற்றி விளிம்பைக்கொண்டு இப்போது உறுதிசெய்துகொள்ளலாம்! சென்றமுறை தமிழ்நாட்டை பிஜேபியினர் சபித்துத் தள்ளியதுபோல இந்தமுறை ஜனநாயகக் கட்சியினரும் ஃப்ளோரிடாவையும் ஓஹையோவையும் சபித்துத் தள்ளலாம். போதாக்குறைக்கு பாராளுமன்றத்தின் ஜனநாயகக் கட்சித் தலைவர் டாம் டாஷ்ல் வேறு தோற்றிருக்கிறார். அது கிட்டத்தட்ட அத்வானி தோற்பதற்குச் சமம். காரணம், தன் சொந்த மாநிலமான தெற்கு டகோட்டாவைவிட்டு வாஷிங்டனுக்குத் தன் ஜாகையை மாற்றிக்கொண்டதுதானென்று யூகிக்கிறார்கள்!
அதெல்லாம் சரி, நம் விஷயம்? சில வாரங்கள் முன்பு, 'ஜனநாயக சர்வாதிகாரி' (Democratic dictator) முஷாரஃப்பை சிஎன்என் பேட்டிகண்டது. புஷ்ஷின் கதாநாயகக் குணாம்சங்களை வெகுவாகச் சிலாகித்த முஷாரஃப், கெர்ரியைப்பற்றித் தனக்குப் பெரிதாக ஒன்றும் தெரியாதென்றார். ஏற்கனவே பாகிஸ்தானுக்கு அமெரிக்கா Major non NATO ally அந்தஸ்து கொடுத்துவிட்டதால், அந்த உறவு இனியும் தொடரும் என்றும், அமெரிக்காவும் ரஷ்யாவும் ஆஃப்கானிஸ்தானைச் சீரழித்தது போதாதென்று அதேமாதிரிப் பிரச்னையை இன்னும் கிழக்கில் தள்ளி, கடைசியில் முஷாரஃப், நீங்கள் எல்லாம் ஒதுங்குங்கள் என்று நம்மையெல்லாம் கடலில் குதித்துத் தற்கொலை செய்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்ளவும் கூடும்! நம் பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ள ஒரு tinpot dictator உடன் நாம் உட்கார்ந்து பேசவேண்டியதாயிருக்கிறது! கிட்டத்தட்ட 13 நூற்றாண்டுகள் கலாச்சார, பொருளாதார gangrape செய்யப்பட்டபின்னும் இந்தியா இன்னும் யாரையும் உதைக்காமலே பிழைக்கமுயன்றுகொண்டிருக்கிறது என்பதை யாரும் அங்கீகரித்ததாகத் தெரியவில்லை. இந்தவகையில் பார்க்கும்போது அதனால்தான் பிஜேபி காங்கிரஸ் என்ற இரண்டு கட்சிகளின் தற்போதைய நிலைமைகளில் ஒருவித equilibrium இருப்பதாகப் படுகிறது. பிஜேபி ஆட்சியிலிருந்தால் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பில்லை, பிஜேபியே இல்லாமல் காங்கிரஸ் மட்டும் ஆட்சியிலிருந்தால் பெரும்பான்மையினருக்குப் பாதுகாப்பில்லை (இது தமாஷ் அல்ல, உண்மை! மதச்சார்பின்மை என்ற போர்வையில் மதங்களுக்கிடையில் பெரும் பிளவுகளை ஏற்படுத்துவது காங்கிரஸும், கருணாநிதி போன்ற கருங்காலிகளும்தானென்று நினைக்கிறேன். கருணாநிதி தன் மந்திரிகளை ரம்ஜான் நொய்க்கஞ்சி குடிக்க மசூதிகளுக்கும், அப்பம் தின்ன தேவாலயங்களுக்கும் அனுப்புவார், இந்து என்றால் திருடன் என்பார்! நான் ஏதோ ஒரு மதம் சார்பாகப் பேசவில்லை. திட்டுகிறாயா? அனைத்து மதங்களையும் திட்டு. திட்டவில்லையா? எந்த மதத்தைப்பற்றியும் பேசாமல் மூடிக்கொண்டு இரு. தமிழ்நாட்டில் புத்த ஓட்டுக்கள் அவ்வளவாக இல்லை. இல்லையென்றால் திமுக நாத்திக சிரோன்மணிகள் திபெத்தியத் துறவிகள்போலக் காவி உடை, மொட்டைத்தலை, கட்டைச்செருப்புடன் தம்மபதம் ஓதிக்கொண்டிருப்பார்கள். Grrrrrrrrrrrrrrrrrrrrrrr...) என்பதுதான் உண்மை.
Wednesday, November 03, 2004
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
>>>>திட்டவில்லையா? எந்த மதத்தைப்பற்றியும் பேசாமல் மூடிக்கொண்டு இரு.<<<<
அருமையான உண்மையான வாசகம்!
-dyno
பாம்பு,
ஆரம்பத்தில் உங்களிடம் இருந்த ஒரு sophistication (பதவிசு?) இப்ப காணலையே? அது வேற ஆளா? இந்தக் கடைசி பாரா கொஞ்சம் பரவாயில்லை. உங்க லெவலை மெயின்டைன் பண்ணுங்க;)
-காசி
Post a Comment