ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதுகுறித்த பத்ரி, ரவி ஸ்ரீனிவாஸ் பதிவுகள். தற்போதைக்கு அவ்வளவுதான் படித்தேன். மடம் நடத்தும் கல்லூரிகளில் நடக்கும் இந்தக் கூத்தையும், கருணாநிதி பாணியில் சோ கொடுத்துள்ள இந்தப் பேட்டியையும் படிக்கமுயலவும். தமிழ்நாட்டில் சமீபகாலமாக சுவாரஸ்யமான விஷயங்கள் ஒன்றடுத்து ஒன்றாக வந்துகொண்டேயிருப்பது ஜனங்களுக்கும் ஊடகங்களுக்கும் நல்ல தீனிதான். சரவணபவன் அண்ணாச்சி, ஜெயலட்சுமி, வீரப்பன், திருச்சி செக்ஸ் சாமியார், கவர்னர் Ctrl+Alt+Del, இப்போது ஜெயேந்திரர்.......
இந்த வரிசையில் அவரைச் சேர்த்துவிடுவதை நான் செய்யாவிட்டாலும், சேர்க்கப்பட்டுவிடுவது காலத்தின் கட்டாயம்.
சங்கரர் என்று அவரை அழைக்க ஏனோ எப்போதும் எனக்குத் தோன்றியதில்லை.
இப்போதுவரை படித்த பதிவுகளில் மிகவும் பிடித்தது இதுதான். பெரிய தத்துவ/சூழல் அலசல் என்றில்லாமல், மனதில் பட்டதை வெளிப்படையாகச் சொன்னதற்கு என் பாராட்டுக்கள். எப்போதோ ஒருமுறை வலைப்பதிவுகளில் கிடைக்கும் இந்தமாதிரியான அலங்காரமற்ற பதிவுகளைப் படிக்கும்போதுதான் சற்று ஆசுவாசம் கிடைக்கிறது.
Friday, November 12, 2004
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இந்த வரிசையில் அவரைச் சேர்த்துவிடுவதை நான் செய்யாவிட்டாலும், சேர்க்கப்பட்டுவிடுவது காலத்தின் கட்டாயம்.
:-)
உங்கள் விமர்சனத்திற்கு நன்றி - அருண்
Post a Comment