கணிப்பொறி அறிவு சுத்தமாக இல்லாத ஒருவனால், dynamic font டைப்பற்றி யாரிடமும் கேட்காமல் அனைத்தும் தமிழிலேயே படித்துப் பார்த்து, கேட்டு, கூகிளில் தேடி, தனது வலைப்பதிவில் இரண்டுமணி நேரத்துக்குள் பதிக்கமுடியுமென்னுமளவு வசதிகள் செய்துவைத்துள்ள காசி, ஒரு நீண்ட விளக்கப்பாடம் கொடுத்துள்ள சுரதா, தானியங்கி எழுத்துரு html code ஐத் தனது வலைப்பதிவில் தெரிவித்திருக்கும் உமர், மற்றும் எனக்குத் தெரியாத மற்ற பலர் - அனைவருக்கும் ஒரு ஜே! இருந்தாலும், 'previous post'ன் பழைய பதிவுகளைச் சுட்டும்போது non-dynamic font வடிவத்திலேயே display ஆகிறது! இதற்குமேல் சம்பந்தமில்லாத துறையில் நோண்டிக்கொண்டிருந்தால் கிறுக்குப் பிடித்துவிடும் என்பதால், இத்துடன் அனைவருக்கும் நன்றிகூறி, புஷ் தலைமையிலான அமைதிப் பூங்காவுக்குள் செல்கிறேனென்று கூறி விடைபெறுகிறேன்!!
Wednesday, November 03, 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment