Friday, December 17, 2004

அறிவியல் கலைச்சொற்கள்

//இது தவிர ஆங்கிலத்தில் எழுதும் போது கலைச்சொற்கள் ஒரு பிரச்சினையேயில்லை. தமிழில் அது ஒரு முக்கியமான பிரச்சினை.//

மிகவும் உண்மை இது.முதல் வரியில் இருக்கும் ரவி ஸ்ரீனிவாஸ் பதிவைப் படித்ததும் தோன்றிய சில எண்ணங்களைப் பின்னூட்டமாக இடலாம் என்று நினைத்தேன். Theorizingல் எனக்குள்ள பலவீனம் உடனே புரிந்துவிட்டதால், சரி, ஒரு அறிவியல் வாக்கியத்தை உருவி ஒரு சின்ன case-study செய்யலாமென்று யோசித்ததன் விளைவே இந்தப் பதிவு. அவர் கூறியது குறித்தான பின்னூட்டம் போலத் தொடர்ந்தாலும், ஒருவகையில் இது அதைவிடச் சற்று விலகியிருப்பதாகவே தோன்றுகிறது. இருந்தாலும், தோன்றியவற்றை எழுதிவைக்கிறேன். நான் கீழே சொல்வது பெரும்பாலும், ஏற்கனவே பலமுறை விவாதிக்கப்பட்டுத் தேய்ந்துபோன பழங்கருத்துக்கள்தான் என்று நினைக்கிறேன், எதுவும் பெரிதாகப் புதிதாக இருக்கிறதா என்று தெரியவில்லை.

தொழில்நுட்பம் சார்ந்த எழுத்துக்களில் கலைச்சொற்கள் இல்லாதது பெரும் சங்கடமே. இருக்கும் சொற்களும் எவ்வளவு துல்லியமானவை என்று கூறமுடியாது. Words are notoriously imprecise எனலாம், சுருக்கமாக. உதாரணத்துக்கு, gene என்ற சொல்லைத் தமிழில் மரபணு என்று குறிக்கிறோம். அசல் ஆங்கில வார்த்தையை மறந்துவிடலாம். 'மரபணு' என்பது முதன்முதலில் தமிழில் தோன்றியது என்று கொள்ளலாம் (ஆங்கிலம் gene என்பதைக் குறிக்கும் அதே அர்த்தத்துடன்). 'மரபணு' என்பதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முயலும்போது, அதை 'hereditary atom' என்று மொழிபெயர்த்தால் எப்படி இருக்குமோ அதுபோல்தான் பெரும்பாலான ஆங்கில-தமிழ் மொழியாக்கங்களும் உள்ளன - குறைந்தபட்சம் புழக்கத்தில் உள்ளவையாவது. 'பேருந்து' என்பதை 'a large pushing force' என்று யாரும் அர்த்தம் செய்துகொள்ளமாட்டார்கள் என்றாலும், ஆங்கிலம் பிறமொழி வார்த்தைகளை ஸ்வீகரித்துக்கொள்ளத் தொடங்கியபோது அதனிடமிருந்த irreverenceதான் தற்போது நமக்குத் தேவை என்பது என் அபிப்ராயம் - குறைந்த பட்சம் அறிவியல் துறைகளிலாவது. சொற்கள் மீதான பக்தி அழகியலில் மிகவும் அவசியம் எனினும், அறிவியலில் அதுவே மிகப்பெரிய தடைக்கல். கிரேக்க, லத்தீன் மொழிகள் பேசப்படாத, ஆங்கிலம் பேசப்படும் இடங்களில் ஆங்கிலம் கிரேக்கத்தை எப்படி decompose செய்து தன் நுட்ப அறிவியலுக்கும், லத்தீனையும் பிற Germanic மொழிகளையும் தன் வெளிக்கட்டமைப்புக்கும் பயன்படுத்திக்கொண்டதோ, அதுபோல் நாம் ஆங்கிலத்தை decompose செய்து அதை தமிழின் கட்டமைப்புக்குள் hybridize செய்வதே மிகப் பொருத்தமாக இருக்கும் என்பது என் அபிப்ராயம். வேற்றுமொழிச் சொற்களின் தமிழ்ப் பிரயோகங்களைக் கண்டுபிடிக்க பழம் தமிழ் வார்த்தைகளைத் தேடுவதில் நேரத்தைச் செலவழிப்பது உசிதமா அல்லது இருக்கும் சொற்கிடங்கை (langue) ஐ உபயோகித்து தேவைக்கேற்ப உடனுக்குடன் சொற்களை உருவாக்கிக்கொள்வதில் நேரத்தைச் செலவழிப்பது உசிதமா என்று முதலில் தீர்மானித்துக்கொள்வது நலம் என்று நினைக்கிறேன். இவ்விரண்டையும் சமகாலத்தில் செய்வது இன்னும் அதிக உபயோகமளிக்கும்.

தூய்மைவாதிகளின் (purists) '100% தூய தமிழ்' என்பதெல்லாம் சாத்தியமில்லை. வேண்டுமானால் 1950ன் உலக அறிவியலை 2000த்தில் தூய தமிழில் கொண்டுவர முடியும். 2004ன் அறிவியலை 2005லாவது தமிழில் கொண்டுவரவேண்டுமென்றால் மொழித்தூய்மை மேலுள்ள போலிப் பிடிமானங்களை உதறிவிட்டு, முடிந்தால் சரிநிகர்த் தமிழ்ச்சொல், முடியாவிட்டால் அப்படியே ஆங்கிலத்திலிருந்து transliteration என்பதுதான் தற்போதைக்கு உசிதம். வினைச்சொற்களை வேற்றுமொழி அறிவியலில் படிப்பதுதான் சிக்கல், பெயர்ச்சொற்களை அல்ல.

உதாரணத்துக்கு, ஒரு அறிவியல் கட்டுரையில் முதல் இரண்டு வாக்கியங்களை எடுத்து ஒரு சின்ன case-study.

Genomic microsatellites (simple sequence repeats; SSRs), iterations of 1-6 bp nucleotide motifs, have been detected in the genomes of every organism analysed so far, and are often found at frequencies much higher than would be predicted purely on the grounds of base composition (Tautz&Renz 1984; Epplen et al. 1993). Bell (1996) suggested that the abundance and length distribution of SSRs across the genome could result from unbiased single-step random walk processes. (Li et al., Molecular Ecology (2002) 11, 2453-2465)

இதை வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்கவேண்டிய அவசியமில்லை. அப்படியே செய்தாலும் அது கீழ்க்கண்டவாறு இருக்கும். அகராதித் துணைகளேதும் இல்லாததால், எனக்குத் தெரிந்த தமிழையும் அறிவியலையும் வைத்து அதை மொழிபெயர்க்க முயல்கிறேன், இதைவிடவும் தெளிவாக யாரேனும் மொழிபெயர்க்க முடிந்தால் கமெண்ட் பகுதியில் இடவும். நல்ல விஷயம்தான். இப்போது மொழிபெயர்ப்பு:

"மரபகராதி நுண்மறுபடியாக்கங்கள் (எளிமையான நியூக்ளிக் அமிலவரிசை மறுபடியாக்கங்கள்; எ.நி.ம) என அழைக்கப்படும் 1-6 நியூக்ளிக் அமிலமூலங்கள் மறுபடியாக்கம் செய்யப்படும் பகுதிகள், ஆராயப்பட்ட அனைத்து உயிரினங்களின் மரபகராதிகளிலும் கண்டறியப்பட்டுள்ளன; நியூக்ளிக் அமிலமூலங்களின் கட்டமைப்பைமட்டும் கொண்டு யூகிக்கப்படும் எண்ணிக்கையைவிட அவற்றின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கிறது (டாட்ஸ்&ரென்ஸ் 1984; எப்லன்&மற்றையோர் 1993). மரபகராதியில் எ.நி.ம களின் பரவல் மற்றும் நீளம், பாரபட்சமற்ற, நிகழ்தகவற்ற ஓர்-நிலை நடத்தலால் நிகழ்கிறது என்று பெல் (1996) கருதுகிறார்."

இதில் எனக்கு ஏகத்துக்கு இடறும், இடறிய வார்த்தைகள்:
Genome - மரபகராதி என்று நான் தற்போதைக்கு உபயோகப்படுத்தியுள்ள வார்த்தையில் ஸ்பானர் போட்டால், dictionary of heredity என்று கழலும். ஆனால், அதை மரபகராதி என்று கூறலாம் என்றே நினைக்கிறேன்.
genomic - 'ic' என்பதை 'இன்' சேர்த்து 'மரபகராதியின்' என்று ஆக்கிவிடலாம்
microsatellites - ஹிஹி!! transliteration செய்தால், நுண்செயற்கைக்கோள் என்று வரும். சரியான அர்த்தத்துக்கு சுட்டியைச் சுட்டவும். நுண்மறுபடியாக்கங்கள் என்று நான் குறிப்பிட்டுள்ள வார்த்தை ஏகத்துக்கு இடறுகிறது.
sequence - வரிசை என்பது சரி தான். ஆனால், sequence of events என்பதற்கும், உயிரியலில் sequence என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. இந்த sequence என்பது nucleotide sequence ஐக் குறிக்கிறது. இது ஆங்கில உயிரியலில் ஒரு taken for granted அர்த்தம். வரிசை என்றே நாமும் உபயோகிக்க முடியும், ஆனால் அதற்குமுன்பு அந்தக் கருத்தாக்கம் குறித்த புரிதல் வாசகர்களிடம் இருக்கவேண்டும்.
repeat - மறுபடியாக்கம் (microsatellite என்பதற்கும் இதே பதத்தை ஒரு பகுதியாகப் பயன்படுத்தியுள்ளேன். சொற்குவியலைத் தடுக்க சொற்களின் மறுபடியாக்கமும் தேவைதான். தமிழ்ப் புலவர்கள் மறுபடியாக்கம் என்பது doing it again ஐக் குறிக்கிறது, repeat என்பதன் அசல் அர்த்தத்தைச் சுட்டவில்லை என்றால் நான் அப்பீட் மக்கா!
nucleotide - ஹிஹி! நியூக்ளிக் அமிலமூலமாம் இது. எவ்வளவு அபத்தமாக இருக்கிறது. எங்கே போய் முட்டிக்கொள்ள. இதற்குப் பேசாமல் நியூக்ளியோட்டைடு என்று எழுதிவிடலாம். பேச்சுத்தமிழ் மற்றும் இலக்கணத் தெலுங்கில் 'உ'ஓசையோடு பெரும்பாலான சொற்கள் முடிவதால் (உபயம் கால்டுவெல் பாதிரி), t என்று முடியும் சொற்களைக் குறிக்க ட்/ட வையும், d/de ஓசைகளைக் குறிக்க 'டு' வையும் உபயோகப்படுத்தலாம். அப்படியே பிறமொழிச் சொற்களை உள்வாங்கும்போது இந்த நேர்த்திக்கும் சற்றுக் கவனம்செலுத்துவது அவசியமென்று நினைக்கிறேன்.
frequency - இதற்குக் கட்டாயம் தமிழில் வார்த்தை இருக்கும் என்று நினைக்கிறேன், தெரியவில்லை, தெரிந்தவர்கள் கூறவும்.
base - அடித்தளம்!! இன்னொரு ஹிஹி! adenine, guanine, thymidine, cytosine, uracil ஐந்தையும் nucleotides என்றும் விளிக்கலாம், அல்லது இன்னும் சாதாரண மொழியில் bases என்றும் அழைக்கலாம்.
composition - கட்டமைப்பு என்பது பொருத்தமான வார்த்தை. ஆனால் ஏதோவொன்று இடறுகிறது.
random walk process - அப்பீட். அறிவியலில் இது எதைக் குறிக்கிறதென்று எனக்குத் தெரிகிறது, அதைச் சரியான முறையில் தமிழ் வார்த்தைகளில் கொண்டுவரமுடியவில்லை.
motif - இதுவும் அதேபோலத்தான். 'பகுதி' என்று நான் குறித்தது இதைத்தான். என்ன ஒரு பலவீனமான தமிழ் சமவார்த்தை. motif என்பதன் சரிநிகர் வார்த்தையை, அதேயளவு அறிவியல் துல்லியத்துடன் (scientific correctness) கூறவேண்டுமென்றால், புதிதாக ஒரு வார்த்தையைக் கண்டுபிடிக்கவேண்டும்.
random - நான் உபயோகித்துள்ள 'நிகழ்தகவற்ற' என்பது நிஜத்தில் 'not probable' அல்லது 'improbable' என்பதையே குறிக்கிறது. random என்பதற்கு ஒரு தமிழ் வார்த்தையை என்னால் யோசிக்க இயலவில்லை என்பதே பெரும் அவமானமளிக்கிறது.

இப்போது, அதே வாக்கியங்களை, எனக்கு சுலபத்தில் தமிழில் விளங்கிக்கொள்ளுமாறு இப்படி மொழிபெயர்க்க முயல்கிறேன்:
"மரபகராதி மைக்ரோசாட்டிலைட்டுகள் (இந்தச் சுருக்கங்களைத் தூக்கிக் கடாசுங்கள், அதெல்லாம் தமிழில் அறிவியல் மொழி ஓரளவு வளர்ந்தபின் பார்த்துக்கொள்ளலாம்) என அழைக்கப்படும் 1-6 நியூக்ளியோட்டைடு மறுபடியாக்க மொட்டீஃபுகள், இதுவரை ஆராயப்பட்ட உயிரினங்கள் அனைத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நியூக்ளியோட்டைடு கட்டமைப்பை மட்டும் கொண்டு யூகிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அவற்றின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கிறது (டாட்ஸ்&ரென்ஸ் 1984; எப்லன்&மற்றையோர் 1993). மரபகராதியில் மைக்ரோசாட்டிலைட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ள முறை மற்றும் அவற்றின் நீளம், பாரபட்சமற்ற ஒரு single-step random walk process மூலம் நடக்கிறது."

எனக்கு, மேற்கண்ட வாக்கியம் இன்னும் எளிதாகப் படுகிறது. single-step random walk process என்பதை என்னால் மொழிபெயர்க்க இயலவில்லை. இது, மொழிபெயர்ப்பு என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். சாரத்தை உள்வாங்கிக்கொண்டு நமது சொந்த நடையில், பொருள் மாறாமல் எழுதுவது இன்னும் சுலபமாக இருக்கும் என்பது என் அபிப்ராயம் - அதாவது, இந்தத் துறையில் உள்ள ஓர் அறிவியலாளன் எழுதினால். Transliteration செய்யப்பட்டுள்ள வார்த்தைகளுக்கான அகராதியை முதலில் தயாரித்துவிட்டு பின் மேற்கண்ட வாக்கியத்தை மொழிபெயர்ப்போமென்பது ஒரு பிரயோஜனமற்ற வாதம்.

மேற்கண்ட வாக்கியத்தின் வினைச்சொற்களை anglicize செய்து பார்க்கிறேன்.

"மரபகராதி மைக்ரோசாட்டிலைட்டுகள் என காலப்படும் (call செய்யப்படும்) 1-6 நியூக்ளியோட்டைடு மறுபடியாக்க மொட்டீஃபுகள், இதுவரை இன்வெஸ்டிகேட்டப்பட்ட ஆல் உயிரினங்களிலும் ஃபைண்டப்பட்டுள்ளன. நியூக்ளியோட்டைடு கட்டமைப்பை மட்டும் கொண்டு ப்ரிடிக்டப்பட்ட எண்ணிக்கையைவிட அவற்றின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக தேர்(there). மரபகராதியில் மைக்ரோசாட்டிலைட்டுகள் டிஸ்ட்ரிபியூட்டப்பட்டுள்ள மெத்தடு மற்றும் அவற்றின் நீளம், பாரபட்சமற்ற ஒரு single-step random walk process மூலம் ஹாப்பனிங்" - கேட்கவே கொடூரமாக இல்லை? வினைச்சொற்களில் கைவைத்தால் மொழி காலி என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமுமில்லை. ஆனால் அதை எதிர்த்துக் குரல்கள் எழும்பியிருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனந்த விகடனும், கேபிள் தொலைக்காட்சி காம்பியர்களும் டூவுவது திஸ்ஸுதான்.

கடைசியாக, என்ன சொல்ல வந்தேன் என்பதை, இந்த slogல் தவறவிட்டிருந்தால் - சில விளக்கங்கள் சுருக்கமாக:
* இந்தமாதிரியான hybridization தமிழின் தனித்துவத்தைப் பாதித்து மொழியைக் கொன்றுவிடும் என்பவர்கள், பின்வரும் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 1) தமிழ் பேசும் மனிதர்களின் வளர்ச்சிக்கு உதவுமாறு தமிழை உபயோகப்படுத்திக்கொள்ளவேண்டும். 2) தமிழ் பேசும் மனிதர்கள் தங்கள் வளர்ச்சியைத் தியாகம் செய்தாவது தமிழின் தூய்மையைக் காப்பாற்றவேண்டும்.
* இந்தமாதிரியான hybridization னால் தமிழின் அழகியல் காணாமற்போய்விடும் என்பவர்களுக்கு: சரி, அதனால்தான் ஆங்கிலம் இவ்வளவு கண்றாவியாக, அழகியல் உணர்ச்சியின்றி இருக்கிறது! வேற்றுமொழிப்பிரேமை ஆங்கிலத்தையும் விட்டுவைத்ததில்லை; எட்கர் ஆலன் போவைப் படியுங்கள். ஃப்ரெஞ்சை வாரித் தெளித்திருப்பார்!

சரி, மேற்கத்திய வாலைப் பிடிக்கவேண்டாமென்றால், நான் கூறியதை சமஸ்கிருதத்திலிருந்து ஆரம்பிக்கலாம், ஏனென்றால் சமஸ்கிருதத்தில் ஏரோப்ளேன் பற்றியும், கோபுர வடிவமைப்புக்கள் போன்றவற்றை யூக்ளிடுக்கு முன்பேயும் கூறிவிட்டார்கள். இப்போது நாம் போட்டுக்கொள்ளும் பெனிசிலின் கூட அங்கேயிருந்து வந்ததுதான் - ஹிஹி! அடடா, ஆரிய வாலைப் பிடிக்கவேண்டாமென்றால், பழந்தமிழ் அகராதிகளை போர்க்கால நடவடிக்கைபோல எடுத்து, இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குள் அனைத்துத் தமிழற்ற வார்த்தைகளுக்கும் தமிழ் நிகரொன்றைக் கண்டுபிடித்துவிடவேண்டும். அங்கேதான் வரும் பிரச்சினை. நூத்தியெட்டுச் சாதிகள், நூத்தியெட்டு விதமான சொலவடைகள். ஒரு சாதி இன்னொரு சாதி வாலைப் பிடிக்காது. ஆதி தமிழ் வார்த்தைகளைக் கண்டுபிடிக்க இந்தியப் பெருங்கடலைத் தோண்டி குமரிக்கண்டத்திலும் பஃறுளியாற்றங்கரையிலும் இன்னும் தூய்மையைத் தேடவேண்டும். அதிலும் ஏதாவது சாதிகள் இருந்தால் போச்சு. முதற்சங்க நூல்களைக் கண்டுபிடித்தபின் -1, -2 என்ற ரீதியிலும் தேடவேண்டும். அது வேறு விஷயம். அதுதானே முக்கியம் வாழ்க்கைக்கு. என்னடா மெட்டீரியலிஸ்ட்டு ஹெடானிஸ்ட்டு ரேஷனலிஸ்ட்டு, நீ எப்போது ஸ்பிரிச்சுவலிஸ்ட்டு கல்ச்சுரலிஸ்ட்டு நேச்சுரலிஸ்ட்டு ஏஸ்த்தடிஸ்ட்டு ஆவது, உன் கால்களில் ரூட்டை முளைக்கவிட்டு ஊன்றிக்கொள்வது என்ற குரல்களும் நன்றாகவே கேட்கிறது (ஒருவேளை என் மனச்சாட்சியோ அது!?!?). யப்பா சாமி, அதையெல்லாம் ஒருகாலத்தில் தீவிரமாக நம்பி, பித்தம் தெளிந்தபின் அதையே புளிக்கும்வரை தின்று பெரிதாக ஒரு ஏப்பமும் விட்டாச்சு.

நான் உபயோகப்படுத்திய அந்த வாக்கியங்கள், கையில் கிடைத்த முதல் அறிவியல் சஞ்சிகை ஒன்றிலிருந்து random ஆக உருவியது. 100% தூய தமிழ் கொண்டு அறிவியலை வளர்க்கக் காத்திருப்பவர்கள், சால்வையைப் பின்னிப் பிரித்து பின்னிப் பிரித்து பின்னிப் பிரித்தவாறு காத்திருந்த 'ஒடிஸி'யின் பெனிலோப் போலக் காத்திருக்கவேண்டியதுதான். கிரேக்கத்தின், லத்தீனின் மூலக்கூறுகளை தன் தேவைகளுக்கேற்றவாறு கட்டுடைத்து (ஹா, எவ்வளவு பெரிய வார்த்தை, கீழே போட்டால் தரை கிராக் விட்டுவிடும்) ஆங்கிலம் உபயோகப்படுத்திக்கொண்டதுபோல, பின்னொரு காலத்தில் ஆங்கிலத்தையும் வேறொரு மொழி உடைத்து, அதை ஒரு சொற்கிடங்காக மட்டும் உபயோகப்படுத்திக்கொள்ளும் சாத்தியங்களும் உள்ளதென்பதை என்னால் ஓரளவு நம்பமுடிகிறது. தமிழும் ஆங்கிலத்தை அப்படி உபயோகப்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ளதா என்று யோசித்துப் பார்த்தபோதுதான் இந்தப் பதிவு.

ஜப்பானியர்களின் அறிவியல் ஆராய்ச்சி அமெரிக்கர்களதைவிட எந்தவிதத்திலும் குறைந்ததில்லை என்பதால், அவர்களது அறிவியலில் ஆங்கிலத்தின் பங்கு என்ன என்பதுகுறித்து அங்கே இருப்பவர்களது கருத்தையும் அறிய ஆவல்.


11 comments:

Anonymous said...

single-step random walk processes -ஒற்றைப்படி எதேச்சை நடைச்செயல்
எதேச்சை தமிழ்ச்சொல் அல்ல என்று நினைக்கிறேன்

dondu(#11168674346665545885) said...

சமீபத்தில் நான் ஆங்கிலத்திலிருந்துத் தமிழுக்கு மொழி பெயர்த்ததிலிருந்து ஒரு உதாரணம் கீழே இருக்கிறது. ஆங்கிலத்தில் உள்ள நீள் வாக்கியங்கள் தமிழாக்கத்தின்போது உடைக்கப்பட்டு சிறு வாக்கியங்களாக வருவது நலம் என்று நான் நினைக்கிறேன். நீங்கள்?

Present day Electric Power Distribution Networks in the Metros have become highly complicated and are prone to various types of faults resulting in blackout of entire/part of the Distribution System. In such circumstances the restoration of power supply to healthy portion / part of the Distribution Network in minimum time demands immediate attention of the Researchers and Field Engineers.

தற்சமயம் பெருநகரங்களில் செயல்படும் மின் சக்தி பங்கீட்டு வலைகள் மிகவும் சிக்கலானவைகளாக மாறி விட்டன. பல வகையானக் கோளாறுகளுக்கு அவை இரையாகிப் பங்கீட்டு முறையின் முழு/பகுதி செயலிழப்புகள் ஏற்படும் சாத்தியக் கூறுகள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மின் அளிப்பை மீண்டும் நிலை நிறுத்தி, அதை மின் பங்கீட்டு வலையின் பாதிக்கப் படாதப் பகுதிக்கு ஒதுக்கித் தர வேண்டும். அதையும் மிக வேகமாகச் செய்ய வேண்டும். இத்தேவை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் களத்தில் இறங்கி வேலை செய்யும் பொறியாளர்களால் அவசரமாக கவனிக்கப்பட வேண்டியதாகும்.

அன்புடன்,
டோண்டு

சுந்தரவடிவேல் said...

தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் இந்த அகராதியை நான் பயன்படுத்துவதுண்டு:
http://www.tamilvu.org/slet/servlet/o33.o33searh?CboSelect=1&TxtSearch=&OptSearch=Full&id=All&text2=&text1=&link=http://www.tamilvu.org/library/o33/html/o3300001.htm
இதிலும் ஜீனோம், மைக்ரோசாட்டிலைட் எல்லாம் காணவில்லை. ஆனாலும் motif, random போன்றவற்றைக் கண்டுவிடலாம். உதாரணமாய் அதில் motifக்கு நோக்குரு என்றும் ஒரு அர்த்தம் கொடுத்திருக்கிறார்கள். புரதத்தில் இருக்கும் structural motifக்கு இதைப் பயன்படுத்த வேண்டுமானால் அமைப்புரு என்று சொல்லலாம். sequence motifஐ வரிசையுரு என்று சொல்லலாமா? இவ்வகராதிகளில் நீங்கள் சொல்லும் 'மரபகராதி'யைப் போல் புதுசுகளைச் சேர்க்க வேண்டும். ஆக்கலும் புழக்கமும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதால் இப்போதைக்குப் புழக்கத்தை மேம்படுத்தினால் இன்னும் புதிய ஆக்கங்கள் தோன்றும். தனியோ கலப்போ இப்போதைக்கு எதையாச்சும் பண்ணிக்கிட்டு இருந்தாப் போதும்னு தோணுது!

சன்னாசி said...
This comment has been removed by a blog administrator.
ரவி ஸ்ரீநிவாஸ் said...

very interesting and informative.i will write on some of these issues later may be next year.btb dondus translation gives a different meaning as prone to failure is not the same as failure.

dondu(#11168674346665545885) said...

"பல வகையானக் கோளாறுகளுக்கு அவை இரையாகிப் பங்கீட்டு முறையின் முழு/பகுதி செயலிழப்புகள் ஏற்படும் சாத்தியக் கூறுகள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது."
I too have not said there is failure. All I have said is that the probability for failure has increased, which takes care of the expression "prone to failure".

Regards,
Dondu

Anonymous said...

makka matressor!
neer thodatha subject ethuvum illa polirukkirathay... ayya ezhutha aarampitha niruthama ezhuthariyale? ungal tamil conscious really uproots me. oh oh oh.. i am falling

Anonymous said...

நீங்கள் சொல்வது மிகச் சரி. தூய தமிழ் சொற்களுக்காக தமிழாக்கமும் தமிழில் தரமான அறிவியல் கட்டுரைகளும் தடைபட வேண்டாம். மற்றுமொரு எண்ணம்: தமிழ் கலைச்சொற்களுக்கு அடுத்து அதன் ஆங்கில மூலம், ஆங்கிலத்திலேயோ அல்லது transliteration ஆகவோ இருந்தால் புதிதாய் தமிழுக்கு மாறுபவர்களுக்கு எளிமையாகும்.இல்லையேல் ஒரு குழு உக்குறி போல் ஆரம்பத்திலிருந்தே அத்துறையில் இருப்பவர்க்கே புரியும். அனைவரையும் சென்றடையாது. முதலில் தமிழ் பாவிப்போரை அதிகரித்து விட்டால், பின்னர் சீர்மை படுத்துதல் எளிது.

Anonymous said...

siridhu kaalam jappaniya mozhi padiththa anupavaththil sollkiren. avarkall 'tape recorder' enpathai 'tape recoda' endru than ezhudhugirarkal. 'camera' vum appatidhan. veenaaka, oli padhiyum karuvi, padam pidikkum karuvi endrellam jappaniyappaduthi kashtappaduthuvathillai. karuththukkalai elimaiyaaka thamizpaduththalam. peyarshorkalai thamizpaduththa vendiya avasiyam illai.
- aathirai

nifty erotixc stories said...

``I dont know if thats such a good idea, Jules. Well take off as soon as the squids arrive.
adult bedtime stories
free fuck incest pictures stories xxx
free erotic stripper stories
femdom hoh spanking stories
teen bdsm stories
``I dont know if thats such a good idea, Jules. Well take off as soon as the squids arrive.

free gay porn sex stories said...

Julie whispered to him.
forced interracial sex stories
incest brother sister stories
bestiality teen stories
real femdom enslavement stories
lesbian sexual experiences stories
Julie whispered to him.