Wednesday, December 22, 2004

அவுட்சோர்ஸிங் பற்றிய கூறுகெட்ட பஜனை

ரிடிஃப் அவ்வப்போது வெளியிடும் பொறுப்பற்ற செய்திகளில் இதுவும் ஒன்று. முன்னோட்டச் சிகிச்சை (clinical trials)களுக்கு ஏன் இந்தியா மிகப் பொருத்தமான இடமாகி வருகிறது என்று சிலாகித்துக்கொள்ளும் இந்தக் கட்டுரை, முன்னோட்டச் சிகிச்சைகளில் என்ன நடக்கிறது என்றும், யாருக்கு அவை உபயோகமாகின்றன என்பதுபற்றியுமான அடிப்படை அறிவுகூட இல்லாமல் ஹூ ஹா என்ற ரீதியில் எழுதப்பட்டுள்ள ஒன்று. அணுகுண்டு வெடிப்பை அவுட்சோர்ஸிங் செய்தால்கூடப் பாராட்டி எழுதுவார்கள் போல. முன்னோட்டச் சிகிச்சைகளுக்கு மருந்து நிறுவனங்கள் செலவழிக்கும் தொகை பல பில்லியன் டாலர்கள். இவ்வளவு செலவிற்கு அடிப்படைக் காரணம், வளர்ச்சியடைந்த நாடுகளில் முன்னோட்டச் சிகிச்சை நடத்த, நோயாளிகளிடம் புது மருந்தைப் பரிசோதித்துப் பார்க்க உள்ள கடுமையான சட்டதிட்டங்கள்தான். இந்தச் செலவினங்களைக் குறைக்கவே ஆசிய நாடுகளுக்கும் ஆஃப்ரிக்க நாடுகளுக்கும் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் படையெடுப்பது. அந்நாடுகளில் தார்மீக விதிகளும் சட்டதிட்டங்களும் அவ்வளவு காற்றுப்புகாத தன்மையுடனிராதது செலவைப் பெருமளவு குறைப்பது. எப்போது நாம் சந்தோஷப்பட்டுக்கொள்ளலாமென்றால், அந்தந்த நாட்டின் மக்களை உபயோகித்து நிகழ்த்தப்படும் முன்னோட்டச் சிகிச்சைகளின் நேரடிப் பலன்கள் அந்தந்த நாட்டிற்கே முதலில் உபயோகப்படும் எனும்போதுதான். இங்கே நிகழ்த்தப்படும் முன்னோட்டச் சிகிச்சைகளின் முடிவுகளைக்கொண்டு வளர்ச்சியடைந்த நாடுகளின் குடிமக்கள் முதலில் பயன்பெறுவார்கள், காப்புரிமை செய்யப்பட்ட அந்த மருந்துகள் காப்புரிமைக்காலம் முடிந்து அடிப்படை மருந்தாக (generic drug) ஆகும்வரை நாம் காத்திருக்க வேண்டுமென்றால், நமது மக்களின் பங்கும் guinea-pigs ன் பங்கும் ஒன்றேதான். இல்லையென்றால், அந்த மருந்துகளுக்கு பன்னாட்டுக் கம்பெனிகள் நிர்ணயிக்கும் விலையை அழவேண்டியதுதான். சலுகை விலையில் மு.சி நடந்ததே என்று சலுகை விலையில் மருந்துகளை விற்குமா என்ன நிறுவனங்கள்? இந்திய மருந்துத் தொழிலின் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட 5.0 பில்லியன் டாலர்கள்.ஃபைஸர், மெர்க், எலி-லில்லி போன்ற பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் 2002 வருட விற்பனையைப் பார்த்து (இந்தச் சுட்டி powerpoint), அத்துடன் நமது நிலவரத்தையும் ஒப்பிடுங்கள்.ஃபைஸரின் லிப்பிட்டார் மருந்து ஒன்று மட்டுமே 9 பில்லியன் டாலர்களுக்கு விற்பனையாகியுள்ளது. ஒன்றும் ஒன்றும் இரண்டு தானே? இல்லை மூன்றா? ஜாக்கிரதை அவசியம் அவசியம் என்று பலரும் பலநாட்களாகச் சொல்லி வருகிறார்கள். நடக்கிறதா பார்ப்போம்.

தொடர்புள்ள சில சுட்டிகள்:
உலகச் சுகாதார நிறுவனம்
வாஷிங்டன் போஸ்ட்டில் பிரசுரமாகிப் பின் வேறிடத்திலும் கிடைத்தவை
மற்றொரு சுட்டி
கடைசியாக, அமெரிக்காவில் முன்னோட்டச் சிகிச்சை நிகழ்த்தவேண்டுமென்றால் என்னென்ன விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று தெரிந்துகொள்ள இங்கே சுட்டுக. இதெல்லாம் நம்மூரில் எவ்வளவு தூரம் கடைப்பிடிக்கப்படுகிறது என்று மேற்கண்ட சுட்டிகளைப் படித்தால் தெரிந்திருக்குமே!

6 comments:

-/பெயரிலி. said...

நை’£ரியாவிலே மூளைக்காய்ச்சல் வருத்தத்துக்கான மருந்துப்பரிசோதனையும் இதேபோல சலசலப்பை ஏற்படுத்தியது. ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த (பிறப்பால் இந்தியரான) ஓர் அறிவியலாளர் இந்தியாவிலே நிகழ்த்திய மருந்துச்சோதனையும் கண்டனத்துக்கு உள்ளானது.இவை பற்றிய frontline நிகழ்ச்சி ஒன்றோ அல்லது Bill Moyer's NOW நிகழ்ச்சி ஒன்றோ PBS இலே வந்ததாக ஞாபகம். கிடைத்தால், பாருங்கள்.

-/பெயரிலி. said...

நை’£ரியாவிலே மூளைக்காய்ச்சல் வருத்தத்துக்கான மருந்துப்பரிசோதனையும் இதேபோல சலசலப்பை ஏற்படுத்தியது. ==============

ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த (பிறப்பால் இந்தியரான) ஓர் அறிவியலாளர் இந்தியாவிலே நிகழ்த்திய மருந்துச்சோதனையும் கண்டனத்துக்கு உள்ளானது.==============

இவை பற்றிய frontline நிகழ்ச்சி ஒன்றோ அல்லது Bill Moyer's NOW நிகழ்ச்சி ஒன்றோ PBS இலே வந்ததாக ஞாபகம். கிடைத்தால், பாருங்கள்.

சன்னாசி said...

ஜான் ஹாப்கின்ஸில் பக்கத்தைத் தூக்கிவிட்டார்கள் போல.

-/பெயரிலி. said...

http://www.jhu.edu/news_info/news/home01/jul01/india.html

-/பெயரிலி. said...

புரொண்ட் லைனில் இதற்கான அடிப்படைச்செய்தி
DRUG TRIALS AND ETHICS

சன்னாசி said...

தகவல்களுக்கு நன்றி பெயரிலி. ஃப்ரன்ட்லைனின் செய்தியிலுள்ள விஞ்ஞானியின் பெயர் ஏதோ சீன/தைவானியப் பெயர் மாதிரியில்லை இருக்கிறது?