Friday, February 25, 2005

உம்லௌட்

யோசனை எப்படி சட் சட்டென்று தாவுமென்பதற்கு ஒரு சிறிய உதாரணம்: விசிதாவின் பதிவு வழி நியூயார்க்கரில் ஐன்ஸ்டீன் மற்றும் கோடெல் பற்றிய கட்டுரையைப் (சம்பந்தமில்லாத துறை எனினும், மேய்வதில் ஒரு ஆர்வம்தான்) படித்துக்கொண்டிருந்தபோது, Godel என்னும் பெயரில் o வுக்கு மேலிருக்கும் இரட்டைப்புள்ளிகள் (இந்தப் பதிவில் தெரியவில்லை/வெட்டி ஒட்டினால் Gödel என்று தெரிகிறது; ஏதோ சிக்கல், நியூயார்க்கர் கட்டுரையில் சரியான வடிவத்தைப் பார்க்கவும்...) ஆங்கிலத்தில் (அதாவது, ஜெர்மனில்) umlaut என்று அழைக்கப்படுவதாக என் நண்பன்மூலம் அறிகிறேன். பெரும்பாலான கன-உலோக (Heavy metalன் கிண்டற்பெயர் - வேறெதும் தெரிந்தால் சொல்லுங்கள்!!) இசைக்குழுக்களின் பெயர்களிலும் இது இருக்கிறது. ஜெர்மானிய கடினத்தன்மையைக் காண்பிப்பதற்காகவும், அழகியல் வேலைப்பாட்டுக்காகவும் இடப்பட்ட இந்த உம்லௌட், விக்கிப்பீடியாவில் சாதாரணக் குறிப்பொன்றாக ஆரம்பித்து, படிப்படியாக இன்று இருக்கும் நிலைமை வரைக்கும் தகவல்களைச் சேகரித்ததை விளக்கும் ஒரு நல்ல வலைப்பக்கத்தை நண்பன் காண்பித்தான். ஒரு சாதாரண (அதாவது, நமக்கு சாதாரணமாகத் தோன்றக்கூடிய) விஷயம் குறித்து இவ்வளவு தகவல்களை ஒரே இடத்தில் தொகுக்கமுடிந்திருப்பது ஆச்சரியப்படத்தக்க விஷயமே. விக்கிப்பீடியா பக்கங்களில், உம்லௌட், இரண்டு கண்களைக் குறிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர்: நீ அதைப் பார்க்கிறாய், அது உன்னைப் பார்க்கிறது என்ற ரீதியில்... விக்கிப்பீடியா பக்கங்களில் பெரும்பாலான தகவல்கள் இருப்பதால், மேற்கொண்டு பெரிதாக எதுவும் கூறத் தேவையில்லையென்று நினைக்கிறேன்...

சற்று நாளாக Saw படத்தின் டிவிடியை முயன்றுகொண்டிருக்கிறேன், சிக்கமாட்டேனென்கிறது, இன்றாவது கிடைக்கிறதா பார்ப்போம்...

19 comments:

Narain Rajagopalan said...

தலைவரே, சத்தியமா ஒண்ணும் புரியல. அதனால இந்த பதிவை "படிக்க" மட்டும் செய்யறேன். நமக்கு அறிவு அவ்வளதான்

சன்னாசி said...

மன்னிக்க நாராயண்: இதுதான் குறிப்பிடநினைத்தது...ஒன்றும் முக்கியமான விஷயமில்லை; சும்மா தோன்றியதைப் போட்டது, அவ்வளவே...

ரவி ஸ்ரீநிவாஸ் said...

if you have time read godel,escher,bach - and eternal goldern braid.the author of this book has written some other books also.i have read two and the one he edited with daniel dennet.
that was years ago.simply amazing and brilliant

ரவி ஸ்ரீநிவாஸ் said...

it should be an eternal golden braid

Narain Rajagopalan said...

ப்ளடி மேரிக்கு நன்றி ;-) ஆனாலும், என்னளவில் நான் இன்னும் வளரவில்லை என்றே நினைக்கிறேன். நிற்க. உங்களின் குறிப்புகளோடு கொஞ்சம் தயார் படுத்திக்கொண்டு அண்டோனியோனியின் லே நோடே நேற்று பிலிம் சேம்பரில், சில கிசுகிசுப்புகளுடனும், பல குறட்டைகளினூடே பார்த்தேன். என்ன சொல்வது! 60'களில் வந்த படங்களில் பதிவான விசயங்களை கூட இன்னமும் பண்ணாமல் காதலின் பின் ஒடிக்கொண்டிருக்கிறோம். சலிப்பாக இருக்கிறது, தமிழ் படங்களை நினைக்கும்போது. இந்த படம் முழுவதுமே ஒரு மாதிரியான சாய்வான கோணத்தில் காட்சியமைப்புகள் அமைந்திருக்கிறது. விஷவலாக வித்தியாசம் தெரிந்தாலும், சொல்ல வந்தது மரமண்டைக்கு விளங்கவில்லை. கைவசம் மோட்டார் சைக்கிள் டைரி வந்திருக்கிறது. ஞாயிறன்று ஷோ ஒடும் என்று நினைத்திருக்கிறேன். 'காரன்டிரு' கிடைத்தால் பாருங்கள். ஏற்கனவே இந்த படம் பற்றி தொணதொணத்திருப்பேன் [பார்க்க: carandiru

arulselvan said...

ravi,
sure. doug hofstadter 's metamagical themas is great too. it is a collection of essays he wrote (in scientific american after the great martin gardener retired. what a time.) unlike EGB (as it was known fondly to us). Great books to read when you are young and want to refresh your mind.
But in EGB there is a funny page of fonts where he identifies Tamil as spoken in Kerala or something. My copy is in Bangalore. Oh boy. That was what 22 years back!
arul

வசந்தன்(Vasanthan) said...

என்ன மூர்த்தி!
அவர தலைவராப் போட்டு கட்சி ஏதும் தொடங்கிற திட்டமிருக்கா?

Anonymous said...

thanks arul.i dont have a copy on hand to check that.ravi

dondu(#11168674346665545885) said...

இந்த உம்லௌட் சமாசாரத்தில்தான் ஜெர்மன் படிக்கும் பெரும்பாலான ஜெர்மானியர் இல்லாத மாணவர்கள் டிக்டேஷனில் உதை வாங்குவார்கள். இது ஒன்றும் பிரும்ம சூத்திரம் இல்லை. இது a, o மற்றும் u - வுக்குதான் வரும். இது இல்லாத a ராமனில் வரும் ஆவாக உச்சரிக்கப்படும். உம்லௌட்டுடன் வரும் a தேங்க்ஸில் வரும் a போன்று ஏறகுறைய உச்சரிக்கப்படும். தட்டச்சில் உமலௌட் இல்லையென்றால் ஒன்றும் குடி முழுகிவிடாது. அவை முறையே ae, oe & ue ஆக அடிக்கப்படலாம். அதே போல பீட்டா போன்ற எழுத்துக்குப் பதில் ss அடித்தால் தீர்ந்தது விஷயம். (இது எஸ்ஸட் என்று அழைக்கப்படும்).
அன்புடன்,
டோண்டு ராகவன்

சன்னாசி said...

ரவி: நன்றி - படித்துக்கொண்டிருந்தபோது அந்தப் புத்தகத்தை சென்னை Booklandsல் பார்த்திருக்கிறேன் - எஸ்ச்சரும் பாஹும் தெரியுமெனினும், அப்போது கோடெல் யாரெனத் துளியும் தெரியாது. புரட்டிப் பார்த்துவிட்டு வைத்துவிடதாக நினைவு...நன்றி, சந்தர்ப்பம் வாய்ப்பின் படித்துப் பார்க்கிறேன்...

நாராயண்: அப்போதே தேடினேன் - காரந்திரு லோக்கல் டிவிடி கடைகளில் கிடைக்கவில்லை. என் நண்பனொருவன் Netflix உறுப்பினன் - அவன்மூலம் எடுக்கமுடிகிறதா என்று பார்க்கிறேன். என்னதான் இருந்தாலும், கடைகளில் தேடுவது சிகரெட்டைப் பற்றவைக்க லைட்டரைவிட தீப்பெட்டியை சௌகரியமாக உணர்வதுபோன்ற ஒரு மனோநிலைச் சாய்வுதான்!! நெட்ஃப்ளிக்ஸின் பட்டியல் பார்த்துத் தேர்ந்தெடுக்க ஏனோ மனது ஒப்புவதில்லை... ஏகத்துக்கு pedagogicalஆகப் போய்விடுமோ என்று... உண்மைதான், இன்னும் காதலைச் சுற்றித்தான் ஓடிக்கொண்டிருக்கிறோம்... மாறும் என்று நம்பிக்கை வைக்கவேண்டியதுதான், வேறென்ன செய்ய!!

அருள், மூர்த்தி, வசந்தன் - நன்றி..... ஹிஹி, சந்தடி சாக்குல வாழ்க, தலைவர் எல்லாம் வேறயா? ஏதோ சிவனேன்னு நல்லா இருக்கறது பிடிக்கலையா உங்களுக்கு? :-)

சன்னாசி said...

நன்றி ராகவன் - மொழி விற்பன்னர் உங்களை மறந்தேன் பாருங்கள்...

Narain Rajagopalan said...

தலைவர் வாழ்க என்று சொல்வது தமிழினத்தில் தமிழுக்கு செய்யும் துரோகம்.

ஆகவே, தலீவர் வால்க!
வருங்கால அமெரிக்க ஜனாதிபதி வால்க!
வருங்கால இந்திய சேனாதிபதி வாலக!!

இன்னா தல, பில்ட்-அப் போதுமா!! இல்ல இன்னும் ஏத்தனுமா, அது சரி, அமெரிக்க டாக்சிகளில் கட்சிக் கொடிகளை சொருக முடியுமா ? ;-)))))

சன்னாசி said...

நாராயண், விர்ஜின் மேரிக்கே இந்தப் போடு போட்டால், ப்ளடி மேரியெல்லாம் அடிக்கத்தொடங்கினீர்களென்றால் 'Hail Mary' என்று போர்க்குரலெழுப்பிக்கொண்டு பலபேரின் படகைக் கவிழ்த்துவிடுவீர்கள், கேடயங்களைத் துளைத்துவிடுவீர்கள், தேர்களை நொறுக்கிவிடுவீர்கள் போல... நமக்கே அல்வாவா?

Narain Rajagopalan said...

மாண்டீ, அதனால்தானோ என்னமோ, நான் விர்ஜின் மேரியிலேயே இருப்பது எனக்கும், உலகத்துக்கும் உத்தமம் என்று தோன்றுகிறது ;-)

இளங்கோ-டிசே said...

நரேன், Montresorஐ அப்படியே இங்காலை கனடாவிற்கும் பிரதமராக்குவதாயும் ஒரு திட்டம் எனக்கிருக்கிறது (ஏன் வீணாய் அமெரிக்காவிற்கு ஒரு சனாதிபதி, கனடாவிற்கு ஒரு சேனாதிபதி என்று இரண்டு பேரில்லாமல் ஒருவரே இருந்தால் நல்லம் என்ற நல்ல சிந்தனைதான் :-). வேண்டுமென்றால், நரேனை இந்த எலக்சனுக்காய், பிரச்சாரப் பீரங்கியாக அழைப்போமா, Monresor? வாக்குகள் எல்லாம் அளித்து பிரமராக்கலாம், அது very simple. ஆனால் Bloody Maryஐ தினமும் 'குடி'மக்களுக்கு இலவசமாய் வழங்குவதாய் மட்டும் எனக்கு ஒரு வாக்கு கொடுக்கவேண்டும்.

ஈழநாதன்(Eelanathan) said...

என்ன நரைன் Bloody mary பிடிக்காவிட்டால் Screw Driver (vodca mixed with orrange juice)அடிக்கிறது இங்கே சிங்கப்பூரில் பெண்களுக்குப் பிடித்தமான பானம்.ஆரம்ப குடிகாரர்களுக்கும் உகந்தது

Narain Rajagopalan said...

கிளம்பிட்டாங்கய்யா! கிளம்பிட்டாங்கய்யா! என்னை குடிகாரனா ஆக்காம விடமாட்டங்கய்யா!! நல்லாதான்யா செட்டு சேர்ந்திருக்கிறோம். ;-)

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

Margarita kuduththaa en vOte'ai enga pOda sollureeNgaLLO anga pOduvEn. ;)

ஈழநாதன்(Eelanathan) said...

மார்க்கரீத்தா இல்லை டக்கீலா,Irish cream கைவசம் உண்டு எது வேணும்