Tuesday, February 22, 2005

ஒரு டீஸ்பூன் பழங்கஞ்சி...

கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்குமுன்பு துள்ளித் திரிந்த காலத்தில் எங்கள் கல்லூரிப் பத்திரிகையில் எழுதியது (தோண்ட ஆரம்பிச்சுட்டியா பழைய பொட்டிய என்று கலாய்த்துவிடாதீர்கள், வேறு வழியில் கிடைத்தது இது... பாவம் பிழைத்துப்போகிறேன், இதைவிட்டா பழங்கஞ்சி வேறு ஏதும் இப்போதைக்குக் கிடையாது: வாக்குக் கொடுத்துட்டோம்ல...) - இவ்வளவு நாள் கழித்து இப்போது இதைப் படித்தால் நானே நாற்காலியில் நெளியவேண்டியதாயிருக்கிறது - தலைப்பு எதுவும் வைத்ததாகக்கூட நினைவில்லை...

உனக்குப் பிடித்த விஷயங்கள்
ஐந்து சொல்லு என்றாள்.
இரண்டாவது நட்பு
மூன்றாவது தனிமை
நான்காவது பேனா
ஐந்தாவது காகிதம்
என்றேன்.

முதலாவது?

அது
ஒரே எழுத்துள்ள சொல்
என்றேன்:
மௌனமானோம்.

28 comments:

Mookku Sundar said...

நீங்களுமா..?? :-)

Just kidding...

கலக்கீட்டிங்க பாம்பு.

-/பெயரிலி. said...

நீ...ம் :-)

Narain Rajagopalan said...

ஐய்யே...நீங்களுமா ? சரி விடுங்க, இதெல்லாம் வாழ்க்கையில சகஜமப்பா. இதே மாதிரி 10 வருஷத்துக்கு முன்னாடி நானும் பினாத்தலா எழுதினது.

தமிழில் திசைகள் ஐந்து
கிழக்கு
மேற்கு
வடக்கு
தெற்கு
சிலுக்கு

உங்கள மாதிரி நான் நெளிய மாட்டேன், இதெல்லாம் ம்யூசிய மெட்டீரியல்.

சன்னாசி said...

பெயரிலி - சரி. அது என்னடா ஒரு எழுத்து வார்த்தை, 'தூ'வா என்று அப்போதே கலாய்த்தான் பழுத்த பழம் ஒருத்தன்! அதற்கு இதெல்லாம் பரவாயில்லை.....

நாராயண், இந்த நக்கல் அப்போதிருந்தே இருந்திருக்கிறதா!! ;-)

இளங்கோ-டிசே said...

ஆகா, இப்போதுதான் Montresor எனக்கு விளங்கக்கூடிய கவிதையன்றைப் போட்டிருக்கின்றார். அந்த எட்டு வயசுக்கு முன்னான Montresorன் வேறு படைப்புக்கள் இருந்தாலும் கொஞ்சம் படையலிட்டால் நன்றாகவிருக்கும்.
//ஒரே எழுத்துள்ள சொல்//லுக்கு பிறகு நீங்கள் விரும்பிய அந்த மூன்றெழுத்துச் சொல்லைச் சொன்னீர்களா :-)

Mookku Sundar said...

ரமணி,

இந்த பதில் என்னைப்போல ஆளுகளுக்கே தெரியும்போது, அதை நீங்க இங்க வேற எழுதணுமா..?? என்னவோ போங்க..:-)

நாராயணன், செம ரகளையான கவிதையா இருக்கு உங்களுதும்...:-)

சன்னாசி said...

//அந்த எட்டு வயசுக்கு முன்னான Montresorன் வேறு படைப்புக்கள் இருந்தாலும் கொஞ்சம் படையலிட்டால் நன்றாகவிருக்கும். //
டிஜே தலைவா, அதெயெல்லாம் எழுதினால் தமிழ்மணத்து சுடலைமாடசாமிகள் சுருட்டு சாராயம் சகிதமாக என்னைப் படையல் வைத்துவிடுவார்கள் - ஆளை விடுங்க சாமி! :-)

ஈழநாதன்(Eelanathan) said...

இருவரும் மௌனமானோம்.எனும் வரி அழுத்தம் அதிகம்

Narain Rajagopalan said...

மாண்டீ, இதெல்லாம் ரொம்ப சாதாரணம். ரகளையா நிறைய விசயங்கள் இருக்கு, எப்பவாவது போடறேன். நக்கலா தான் எழுதுவேன் அப்பவே, இப்ப நிறைய படிக்கிறதனாலா, இன்னும் கொஞ்சம் அதிகமாயிருக்கும்னு நினைக்கிறேன். ;-)

சாம்பிளுக்கு இன்னொன்னு

காலை அவசரம்
காரைச் சுவற்றில்
நவீன ஒவியம்!!

கறுப்பி said...

என்னவோ சொல்லுங்கள் எனக்குப் பிடித்தது பெயரியின் கவிதைதான் என்னமா "திங்க்" பண்ணுறார். டி.சே நான் நினைக்கிறேன் அந்த மூன்றெழுத்தை அப்போது சொல்லியிருந்தார் என்றால் இப்போது இந்தக் கவிதையை வெறுத்திருப்பார். எனவே சொல்லவில்லை.. இல்லையா மாண்ட்ரீஸர்?

Meyyappan Meyyappan said...

ம்யூசியம் சமாச்சாரம்னு நான் ஒத்துக்கறேன். ஆனா கொஞ்சம் நெளியத்தானே தோணுது. நாராயணின் அவசரக் கவிதை பார்த்தவுடன் ஆச்சரியம். இதே போல முன்னால் கல்லூரி காலத்தில் எழுதிய மூன்று வரி நினைவுக்கு வந்தது,

கோயில் மதிற்சுவரெங்கும்
நிமிட நேர ஓவியம்..
இயற்கை.
ஆனாலும் கோயில் மதிலென்றுபோட்டு கொஞ்சம் கலகக்காரானா படம் காட்டியாச்சு :)

-/பெயரிலி. said...

/நீ...ம்/
சீச்சீ... இந்த "வேம்பு" கசக்கும் :-)

இளங்கோ-டிசே said...

கவிதையின் புதிரை அவிழ்த்த வேகத்தைப் பார்க்கவும், இப்போது வேம்பு போலக் கசக்கும் என்று சொல்கின்ற வித்த்தைப் பார்க்கவும், பெயரிலிக்கு இந்தக்கவிதையோடு ஏதோ நெருங்கிய தொடர்பு இருக்கும்போலத்தானிருக்கிறது? தயங்காது உங்களின் Once upon a time storeyஐ சொன்னால் வேண்டாம் என்றா சொல்லப் போகின்றோம்,பெயரிலி :-) ?

-/பெயரிலி. said...
This comment has been removed by a blog administrator.
Narain Rajagopalan said...

பெயரிலி,

ஏழு டிசேவும், எட்டு நானாகவும் இருக்கலாம் என்று நினைக்கிறேன். :-) நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? ;-)))))))))

ஈழநாதன்(Eelanathan) said...

என்ன நரைன் அது நீங்கள் சொல்லியா தெரியவேண்டும்.ஏழு அல்ல அல்ல ஏழரை என நினைக்கிறேன்

இளங்கோ-டிசே said...

//என்னவோ சொல்லுங்கள் எனக்குப் பிடித்தது பெயரியின் கவிதைதான் என்னமா "திங்க்" பண்ணுறார்//
என்ற கறுப்பியின் இந்த Complimentஐ வாசித்தபோது, பெயரிலியின் சுக்கிர திசை ரொரண்டோப் பக்கம் என்றல்லோ நினைத்திருந்தேன் . கணக்குப் பிசகிப்போய்விட்டதோ :-).

கறுப்பி said...

நான் இனிமேல் பெண்சுதந்திரம் கதைக்கிறேலை எண்டு முடிவெடுத்திட்டன் டி.சே. இனி மேல் ஆண்களுக்காகத்தான் குரல் குடுக்க வேணும். பெண்களுக்கு இருக்கிற துணிவு வரவர ஆண்களிட்ட இல்லாமல் போகுது. நான் கறுப்பி என்ர "X" ஐப்பற்றித் துணிவா புளொக்கில வந்து எழுதிறன். பெயரிலி இந்தப் பயப்பிடு பயப்படுறார். (கொஞ்சம் விடுப்புப் பாப்பம் எண்டா இந்த ஆம்பிளைகள் நல்ல ஸ்மாட்)

-/பெயரிலி. said...
This comment has been removed by a blog administrator.
-/பெயரிலி. said...
This comment has been removed by a blog administrator.
கறுப்பி said...

o.k Peyarili I give up.. wait wait wait a minute. then who is Nithilan? is that you? or your grandson?
by the way I don't get your Chromosomes diversion (*_*)

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

peyarili,

vittaa ungada sariththiraththaiyae inga ezuthiruveenga pOla irukku. paavam intha blogum antha one tsp pazanganchiyum. vittirungaLaen. ;)

Am I right Montressor?

kozuththi vittuvittuppOgum
Mathy

சன்னாசி said...

//Apologies for Montresor for wrigging diversion :-)//

No problem, பெயரிலி: நிஜத்துல மதி சொன்ன மாதிரி ஒரு டீஸ்பூன் பழங்கஞ்சி இவ்வளவு வண்டவாளங்களைத் தண்டவாளத்துக்கு இழுக்கிறதா என்பதுதான் தமாஷ்! ;-)

சன்னாசி said...

மன்னிக்க, 'தண்டவாளத்துக்கு இழுக்கிறது' என்றிருந்திருக்கவேண்டும்.

கறுப்பி said...

ஒண்டு மட்டும் நல்லாத் தெரியுது. என்ன மாதிரியே எல்லாருக்கும் வேலை வெட்டி இல்லையெண்டு. பொழுது போக்க சும்மா தட்டிக்கொண்டு..
மண்ட்ரீஸர் உங்கட அந்த "X" பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க? அந்த சொல்லப்படாத “நீ”
பொழுது போக்க - Please

-/பெயரிலி. said...

/vittaa ungada sariththiraththaiyae inga ezuthiruveenga pOla irukku. paavam intha blogum antha one tsp pazanganchiyum. vittirungaLaen./

புரியுது தாயி; அத்துதான் இந்தத்தபா மட்டும் ஆளை வுட்டுடுங்க அண்ணாத்தேன்னு "Apologies for Montresor for wrigging diversion :-)" வுட்டுட்டு ஓடியாந்தேன். இன்னொரு வாட்டி எயுத வெச்சிட்டீங்களே ;-)

SnackDragon said...

வணக்கம் மாண்ட்ரீ'சார். கொஞ்சம் லேட். கலக்குறீங்க போல தெரியுது.

பெயரிலி, விடுங்க உங்க சரித்திரம் தான , உங்க சார்பா நான் எயுதுறேன் :)

Narain Rajagopalan said...

த்தோடா, சரித்திர புருஷர்கள் எல்லாம் இங்க இருக்காங்க...நான் வேலைமெனக்கெட்டு எட்டாங்கிளாஸ் வரலாறு புத்தகத்தில இல்ல தேடிட்டு இருக்கேன்.
:-O))))))))))))