Friday, April 01, 2005

ஒரு கதை, ஒரு யோசனை...

திண்ணையில் முதல் பரிசு பெற்ற அறிவியல் புனைகதை: சேவியரின் ஏலி ஏலி லாமா சபக்தானி. காலப் பயணம் என்ற விஷயத்தை எடுத்துக்கொண்டு, அதைக் கிறிஸ்துவின் கடைசி நாளுடன் இணைத்து எழுதப்பட்ட கதை. மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது - வாய்ப்பிருப்பின் கட்டாயம் படித்துப் பார்க்கவும். கதையை இன்னும் எத்தனைபேர் படித்திருப்பீர்கள் என்று தெரியாததால், இங்கே முழுதாக விவரிப்பதைத் தவிர்க்கிறேன்.

சற்று நாள் முன்பு, ஒரு பதிவில் பார்த்த திருக்குறளின் 134வது அதிகாரம் என்ற மின்னஞ்சல் நகைச்சுவையைப் பார்த்ததும், ஏன் இதைக்கூட ஒரு சீரியஸான கதையாக யாராவது எழுதினால் நன்றாயிருக்குமே என்றுதான் அப்போது தோன்றியது. கற்பனையாக ஒரு அதிகாரம், பத்து குறள்கள், அந்தப் பத்துக் குறள்களால் இதுவரையிலான திருக்குறள் மீதான அனைத்து விமர்சனங்களும் தலைகீழாகப் புரட்டிப் போடப்படுகின்றன/மாறுபடுகின்றன என்ற ரீதியில். தோன்றினால் யாராவது எழுதுங்கள்... சுவாரஸ்யமாக இருக்கும்!!

3 comments:

ஒரு பொடிச்சி said...

தமிழ் வகுப்பூடாக எனக்குத் தெரிந்த ஒன்று:
"யான் நோக்கும் ஃபிகர் என்னை நோக்காக் கால்
யான் நோக்கி என்ன பயன்"
பையன்கள் பகுதியில் இருந்து வந்தது, பெண்கள் மாற்றிச் சொல்லியதாய் தெரியவில்லை!

நாட்டார் பாடல்கள்போல சுவாரசியமான பல fwd creativeness இற்கும் உரிமையாளர்கள் இல்லை.

கறுப்பி said...

சேவியரின் கதையை முற்று முழுதாக அறிவியல் புனைகதை என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றது. முடிவு மிகவும் திருப்பமாகவும் சுவாரசியமாகவும் இருந்தது. திருக்குறள் திருகுதாளம் முன்பு ஒரு பாலச்சந்தர் திரைப்படத்தில் பார்த்த ஞாபகம் நினைவிற்கு வரவில்லை

Anonymous said...

Where did you find it? Interesting read Drug action of venlafaxine http://www.baccaratonline2.info/roulette_crack.html allegra versace images provigil adhd trialsxx0xxxx0y0xx1 Sex cams no ccs