Tuesday, September 28, 2004

தினமலரும் டுபாகூரும்..

சீனாவில் ஓட்டலுக்குச்சென்ற ஒரு பெண் நூடுல்சில் ஈ இருப்பதைப் பார்த்தார். உடனே மானேஜரை அழைத்தார். அப்போது அங்குவந்த சர்வர் அந்த ஈயைப்பிடித்து விழுங்கினார். பின்னர் தங்கள் நூடுல்சில் ஈ இருக்கவே இருக்காது என்று ஓட்டல் நிர்வாகம் கூறிவிட்டது.

இது 09/28/2004 தினமலர் குட்டீஸ் கார்னரில் வந்த ஒரு துணுக்கு.எழுது சீனாக்காரனைப்பற்றி, யார் கேக்கப்போறா? இது நிஜ சம்பவமா, அப்படியென்றால் ஆதாரம் எங்கே? நிருபர் சீனா போய்வந்தார் போல! Desktop journalism என்பதற்கு புது அர்த்தம் கொடுத்த பெருமை தினமலரையே சாரும் -என்ன எழவை வேணும்னாலும் எழுது, எழுதிட்டு, 'இப்படிப் பேசிக்கொள்கிறார்கள்'னு முடிச்சிரு. அவ்வளவுதான். மேஜை நாற்காலியைவிட்டு நகரவே வேண்டாம்.

4 comments:

வலைஞன் said...

தினமலர் பத்தி எழுதி மலரும் நினைவுகளுக்குப் போக வச்சிட்டீங்களே.
போன வருடம் கோடை விடுமுறையில ஒரு தனியார் பள்ளிக்கூடக்
(ஓட்டுக்கூரை) கட்டிடம் தீயில் எரிந்து சாம்பலானது. அங்கே +2 படித்த மாணவர்களின் பத்தாம் வகுப்புச் சான்றிதழ்களும் எரிந்துவிட்டன. பள்ளி நிர்வாகமோ புதிய சான்றிதழ் பெற்றுத் தராமல் சான்றிதழ் தொலைந்து விட்டதாக மாணவர்களையே விண்ணப்பித்துக் கொள்ளச் சொல்லிவிட்டது. இதனால் பல மாணவர்களின் மேல்படிப்பே தடைப்பட்டது. நண்பரொருவர் தினமலர் நிருபரிடம் பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்மை குறித்து தெரிவித்து செய்தி வெளியிடக் கோரினார். அவரும் செய்தியை தினமலர் அலுவலகத்தில் கொடுத்தார். ஆனால் செய்தி வெளிவரவில்லை. நிருபருக்கும் காரணம் தெரியவில்லை.
நண்பர் விடாமல் விசாரித்துத் தெரிந்து கொண்ட காரணம் இதுதான்...பள்ளி நிர்வாகக் குழு தாங்கள் நடத்தும் நிறுவனங்களின் விளம்பரங்களை தினமலருக்குத் தராமல் நிறுத்தி விடக்கூடும் என்ற அச்சம். என்னே தினமலரின் பத்திரிகை தர்மம்....இதழியல் துணிச்சல்...
வேறொரு பள்ளியில் மாணவன் ஒருவனை ஆசிரியர் கடுமையாகக் கண்டித்ததால் மனம் உடைந்து அவன் தற்கொலை செய்து கொண்டான். மறுநாள் எல்லா நாளிதழ்களிலும் விளக்கமாக இந்தச் செய்தி வெளிவந்தது. தினமலரில் மட்டும் பள்ளியின் பெயரோ காரணமோ குறிப்பிடப் படாமல் சிறுவன் தற்கொலை என்று மட்டும் வந்தது. இதுவும் அதே விளம்பரக் காரணத்தால்தான். மற்றப் பத்திரிகைகளுக்கு ஏனில்லை இந்த அச்சம்?

சன்னாசி said...

சரிதான் அனுராக்; தினமலர் செய்வது வெறும் 'ரௌடி ஜர்னலிஸம்' மட்டுமே என்பது என் கருத்து. உதாரணத்துக்கு வாரமலர் படியுங்கள் - அந்துமணி சாப்பிட்ட மெனு மற்றும் அவரது சுயபுராணம், டயானா, எம்ஜியார் புராணம், துணுக்கு மூட்டை என்ற பெயரில் நடிக, நடிகைகள் அனைவரையும் மடச்சாம்பிராணி பீற்றல் பேர்வழிகள் என்று காண்பிப்பது, இதுபோன்ற ஜல்லியடிக்கும் வேலைகள்தான். Never ending deluge of preconceived notions, shameless agenda என்ற விதத்தில் தினமலரைத் தமிழ்நாட்டின் Fox News Channel என்று சொல்லலாம்.

சுந்தரவடிவேல் said...

சில நாட்களுக்கு முன்னர் "சிசு சூப்" ஒன்றைப் படத்தோடு விளக்கியிருந்தது தினமலர்! யாரேனும் பார்த்தீர்களா?

Anonymous said...

அதை bloggகுங்கள் சுந்தர் - பின்பொருநாள் தினமலரின் வண்டவாளங்களை இணையத்தில் தொகுப்போம்.